Jan 10, 2009

தெரிந்து கொள்ளுங்களேன்

ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார்.
1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது