- கண் மூடிக் கனவில் இருந்தவனை கழுத்தில் தட்டி கண் திறந்த உனக்கு
- கர்வக் குழியில் இருந்தவனை கை பிடித்து கரை தூக்கி விட்ட உனக்கு
- என்னவள் போலஇடை தெரியாமல் உடை உடுத்தும் உனக்கு
- வண்ண வண்ண மனங்கள் பார்த்த எனக்கு வெள்ளை மனம் காட்டிய உனக்கு
- பாதையில் கிடக்கும் பன்னீர் பூக்களை என்போல் பாதம் படாமல் தாண்டிச்செல்லும் உனக்கு
- வேலியில் கிடைக்கும் கோவ்வை பழத்தை கூட ஞானப்பழமாய் நினைத்து நான் தர மறுக்காமல் வாங்கிகொண்ட உனக்கு ........