பம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன் பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்செழியன், தமிழ்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்புக்கு சென்றார்.
நிலையத்தில் நுழைந்ததும் எடைப்பொறியை பார்த்த மாறன், “ தாத்தா எடை பார்க்கவேண்டும், ரூ.1 க்.கொடுங்கள் என்று கேட்டான்.
தாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப்பொறியில் ஏறினான். “ நானும் கூட நிற்பேன்” என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான். வந்து விழுந்த எடை அட்டை 66 கிலோ காட்டியது.
அடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடு ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 70 கிலோ காட்டியது.
மூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப்பொறியில் நிற்கச் செய்ய, எடை 70 கிலோ காட்டியது.
இரயில் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.
மகனை அழைத்துக்கொண்டு வரும்பொழுது பேரன்களின் கைகளில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ்னேசன் “ டேய் பிளாட்பாரம் டிக்கட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
”மாமா இது பிளாட்பாரம் டிக்கட் அல்ல, எடை அட்டை” என்றார்கள்.
அட்டைகளை வாங்கிபார்த்த தமிழ்நேசன், அதில் எடை போட்டு இருப்பதை பார்த்து “இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா?” என்றார்.
அவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்ததை கூறினார்கள்.
“ மாமா நாங்கள் தனித்தனியாக எடை பார்க்க வேண்டும், ரூபாய் கொடுங்கள்” என்றான் செல்வன்.
நான் கணக்கு பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்றூ தமிழ்மாறன், செல்வம்,செழியன் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ்னேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி/.
அந்த 3 எடை அட்டைகளை வைத்து தனித்தனியாக எடையை உங்களால் கூற முடியுமா?