நெஞ்சு எரிச்சல்
பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை "நெஞ்சு எரிச்சல் 'நோய்' (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு 'நெஞ்சு எரிச்சல் நோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம்.
நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத்து ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின், இன்ட்ரின்சிக் ஃபேக்டர், மியூகஸ் ஆகியவை உள்ளன.
இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை 'ஹைப்போ கிளைசிமியா என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் 'வேகஸ்' என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும். இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.
சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி சுருக்கம் சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மாரடைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்துவம் செய்யும் நிலை ஏற்படும்.
'ஆஸ்பிரின்' மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும். ஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தல் அவசியம்.
நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி போன்ற நோயுள்ளவர்களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்நோக்கியே செல்லும். ஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.
நோயின் அறிகுறிகள்: நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டுவிட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும். மசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.
நோயறிதல்: நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் கண்டு பிடிக்கலாம். 'உள்நோக்கி' முறையில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.
உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம். பீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும்.
உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள 'டைஜின்' 'ஜெலுசில்' போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும். நரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்துகொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும். அவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும்.
நன்றி: உண்மை இருமாத இதழ்
Aug 2, 2008
[+/-] |
|
[+/-] |
|
தண்ணீரின் அவசியம்
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.
நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.
உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.
நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.
மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.
[+/-] |
|
மூச்சுப் பயிற்சி
சில மூச்சுவிடும் நுட்பங்கள் உடலில் இருந்து தீங்கு தரும் பொருட்களை அகற்றி, அதன் இயற்கையான நோய்த்தடுப்பையும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் திறனையும் அதிகரிக்கிறது என்று அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் மற்றும் ஒரு முன்னணி அமெரிக்கப் பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளன.
மனம் உடல் தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சித்த இந்த முன்னணி மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த மூச்சுவிடும் பயிற்சிகள் மூளையின் சில பகுதிகளில் வியத்தகு செயல்பாட்டை அளிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். அதே சமயம், இந்த பயிற்சிகளை நெடுங்காலத்திற்கு மேற்கொள்வோரின் மூளையின் இரு அரைக்கோளங்களிலும் அரிதான ஒருங்கிணைப்பைக் காண முடிந்தது.
இதன் பிற விளைவுகளில் புற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுடைய நோயாளிகளில் குறைவாக உள்ள உடலின் இயற்கையான கொல்லும் செல்கள் அதிகரித்தன. ஆன்ட்டி-ஆக்சிடன்ட் என்சைம்களில் அதிகரிப்புடன் உடலின் உடலின் சுத்தப்படுத்தும் திறனும் அதிகரிக்கிறது மற்றும் அழுத்த ஹார்மோன். கோர்ட்டி சோல் அளவு இரத்த ஓட்டத்தில் கணிசமாகக் குறைகிறது.
இந்தப் பயிற்சிகளில் அதிக நம்பிக்கையுள்ளவராக மாறிவிட்ட ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சில் உள்ள ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை கழகத்தலைவர் வினோத் கொச்சுபிள்ளை கூறுகிறார்: "இந்த பயிற்சிகளை முறையாகச் செய்வோர் தங்களது சிந்தனை ஓட்டம் மற்றும் தங்களது உடலில் மாற்றங்களைக் காணத் தொடங்குகின்றனர்."
கொலம்பியா பல்கலைக்கழக கல்லூரியின் அசோசியேட் கிளினிகல் மனஇயல் பேராசிரியர் ஆர். பிரவுன் கூறுகிறார். "இந்த பயிற்சிகளுக்குப் பிறகு மக்கள் பிறருடன் மிகவும் அன்பானவர்களாகவும் தொடர்புடையவர்களாகவும் ஆகின்றனர்."
தங்களது எதிர்மறை உணர்ச்சிகளான வெறுப்பு மற்றும் கோபமும் கூட மெதுவாக அன்பு மற்றும் பரிவால் இடமாற்றம் பெற்றதாக பலர் தம்மிடம் கூறியதாக கொச்சுப்பிள்ளை தெரிவிக்கிறார். குணமாகி வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் பிராணாயாமம் மற்றும் சுதர்ஷன் கிரியா போன்ற யோகப் பயிற்சிகளின் சில வடிவங்களை ஒருங்கிணைக்க இவர் பயின்றுள்ளார்.
இந்த விளைவுகளின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்து கொள்ள ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சின் குறைந்தது ஏழு துறைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நிலை மன அழுத்தமுடைய குழுக்களில் இருந்து ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: ஒன்று, இந்த பயிற்சிகளின் நீண்ட கால விளைவுகளை வெளிப்படுத்தக்கூடிய இந்த பயிற்சிகளைப் பயிற்றுவிப்போர், மற்றும் இரண்டு காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியிலுள்ள வேலைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்ற மிகவும் மன அழுத்தமுடையவர்கள், மூன்று, எந்த விதமான ஓய்வூட்டும் நுட்பங்களையும் அறியாத ஆராய்ச்சியாளர்கள் அல்லது பிறர்.
உதாரணமாக, ஏ.அய்.அய். எம். எஸ். நரம்பியல் துறை துணைப் பேராசிரியர் மன்வீர் பாட்டியா. மூச்சுவிடும் நடவடிக்கையின் போது, முன்பு மற்றும் பிறகு, ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் இதைப் போன்ற பயிற்சிகளை முன்னெப்போதும் செய்து அறியாதவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டார்.
மூளைக் கணக்கு போடுபவர்களின் சில செல்களில் அதிகமான செயலூக்கமும், அதிகமான உஷர் நிலையும் இருந்ததை பாட்டியா கண்டறிந்தார். நெடுநாட்களாக இந்த பயிற்சிகளைச் செய்து வரும் ஆசிரியர்கள் குழுவில் எல்லா மாற்றங்களும் கணிசமான அளவில் இருந்தன.
மீண்டும் ஏ.அய்.அய்.எம்.எஸ். உயிர் - இரசாயனத்துறை கூடுதல் பேராசிரியை நீடாசிங், அல்சீ மர்ஸ், பர்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் போன்ற குறைபாடுகளுக்கு இட்டுச் செல்லும் அடிப்படைக் கூறுகளை சுதந்திரமாக வெளியிடுவதை ஆராய்ந்தார். இந்த பயிற்சிகள் இதைப் போன்ற தீங்குதரும் பொருட்களின் அளவை குறைத்ததைக் கண்டறிந்தார்.
சுரப்பியல் துறையின் மருத்துவர் தீரஜ், பயிற்சிகளுக்குப் பிறகு அழுத்த ஹார்மோன், கோரிஸ்டல் அளவுகள் குறைந்ததைக் கண்டறிந்தார். உடலின் முக்கியமான பாதுகாப்பு அமைப்பான இயற்கையான கொல்லும் செல்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி. இந்த பயிற்சிகளைச் செய்ய ஒப்புக்கொண்ட புற்று நோய் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினருக்கும் அதிகரித்ததை உயிர்நுட்பவியலாளர் எஸ்.என். தாஸ் கண்டறிந்தார்.
இந்த மூச்சுவிடும் பயிற்சிகள், நோயாளிகளுக்கு அதிவிரைவாக பிராணவாயு அளிக்கும் நடைமுறையான ஹெலர் வென்டிலே ஷனின் மற்றொரு வடிவமா அல்லது நன்கு அறிந்து கொள்ளப்படாத நடவடிக்கையா என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது வியக்கிறார்கள். எந்த அளவு தகவல்கள் குறைபாடாக இருக்கக் கூடும் என்பதை அறிந்துகொள்ள ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வழி முறைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது கவனித்து வருகின்றனர். "எல்லா ஆராய்ச்சிக்கும் அதற்குரிய குறைபாடுகள் உண்டு," என்கிறார் உடலியல் கூடுதல் பேராசிரியர் கே.கே. தீபக். இவர் இந்த நுட்பங்களில் பணியாற்றியவர். ஆனால் ஆராய்ச்சியில் பாரபட்சத்தைக் குறைக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார். "அத்துமீறாத வகை முறைகளை நாம் கண்காணிக்க வேண்டும்" என்கிறார் அவர். பயிற்சிகளைச் செய்யும் ஒருவர் ஒரு கருவியின் பல்வேறு வயர்களால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அளவுக்கருவிகளின் குறிப்புகள் பாரபட்சமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். "நோயாளி வேறொரு நிலைக்குச் செல்லலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
[+/-] |
உடலமைப்பு |
உடலமைப்பு:
மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள் தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு சல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும் அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள் செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையான அனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
இரத்த ஓட்டம்:
மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன. உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம் மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது!
எலும்புகள்:
பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன!
மூளை:
வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள் மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாக மனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!
குடல்:
இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!
ரேகைகள்:
மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்கு ஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அமைப்பைக் கொண்டுள்ளது!
இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாக படைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றால் மிகையில்லை!
ஆக்கம்: சகோ. N. ஜமாலுத்தீன்
[+/-] |
|
தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம் சோதிக்கப்படுவது ஏன்..?
காய்ச்சலடிக்கும் போது உடல் வெப்பத்ததை சோதிக்க, மருத்துவர் தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து பார்ப்பது வழக்கம். உடல் வெப்பநிலை என்பது உடலினுள்ளே இருக்கும் வெப்பநிலையாகும். கையிலோ, முதுகிலோ, வெளிக்காற்றினாலும், வியர்வை ஆவியாவதாலும் சரியான உடல் வெப்பநிலையை கணிக்க முடியாது. எனவே சுற்றுப்புற சூழல்களால் பாதிக்கப்படாத இடங்களில் தெர்மாமீட்டரை வைத்து உடல் வெப்பத்தை சோதிப்பார்கள். இவ்வாறான பகுதிகளில் முதன்மையான பகுதி நாக்கின் அடிப்பகுதி. இவை உடலில் உள் வெப்பநிலையை சரியாக காட்டும் இடமாகும். எனவேதான் அங்கே தெர்மா மீட்டர் சோதனை நடத்தப்படுகிறது.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
[+/-] |
சீழ் |
அடிபட்ட காயம் அழுகும்போது கசிந்து வெளிப்படும் ஒழுக்கே சீழ் ஆகும். தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்காக அமைந்த குருதியிலுள்ள சீர்குலைந்த வெள்ளை அணுக்களே சீழாகும்.
வெள்ளையணுக்கள் குருதியில் வாழ்ந்து மிகுந்த தொற்றை எதிர்த்துப் போரிடத் தயார் நிலையில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வெட்டு பழுதுபடும்போது ஏற்படும் தொற்றை எதிர்க்க வல்ல அணுக்கள் வெள்ளையணுக்கள் எனப்படும். குண்டூசியின் தலைக் கொண்டை அளவு குருதியில் சாதாரணமாக 5000 வெள்ளணுக்கள் இருக்கும். ஆனால் மிக அழுகிய புண்ணில் முப்பதாயிரம் வெள்ளணுக்கள் இருக்கலாம். ஏனெனில் அந்த இடத்தில் வெள்ளணுக்கள் ஒன்று திரண்டு பலவாய் பெருகிக்கொள்கின்றன.
குருதியில் உள்ள எதிர்பொருள்கள் கிருமிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. அவ்வாறு போரிட்டுக் கொல்லும்போது வெள்ளணுக்கள் அங்குச் சென்று அவைகளை அழித்துவிடுகின்றன. குருதியில் எதிர்த்து நின்று தொற்றை போக்கப் போதுமான தற்காப்புப் பொருள்கள் இல்லையென மருத்துவர் ஐயங்கொண்டால் அதே தொழிலைச் செய்யும் உயிர் எதிர்ப் பொருள்களைக் கொடுப்பார்.