உடலமைப்பு:
மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள் தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு சல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும் அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள் செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையான அனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
இரத்த ஓட்டம்:
மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன. உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம் மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது!
எலும்புகள்:
பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன!
மூளை:
வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள் மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாக மனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!
குடல்:
இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!
ரேகைகள்:
மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்கு ஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அமைப்பைக் கொண்டுள்ளது!
இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாக படைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றால் மிகையில்லை!
ஆக்கம்: சகோ. N. ஜமாலுத்தீன்