பாருங்க நம்ம ஆளுகளுக்கு அடுத்தவன் கொஞ்சம் சிரிச்சாவே பத்திக்கிட்டு எரியும்.
அதிலயும் பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்கள் சிரிச்சா போச்சு. இங்க இருக்கறவனும் நிம்மதியா இருக்க முடியாது.
இங்க ஒரு அம்மா சிரிப்புக்கே உதாரணமா, அதும் நூறாண்டுக்கும் மேல சிரிச்சிட்டே இருந்தா யாருக்குத்தான் கோபம் வராது.
செய்திய பாருங்களேன்
பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஓவியர் லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மோனாலிஸா ஓவியமானது, குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த ஓவியத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் இந்த ஓவியத்தைப் பார்வையிட 8.5 மில்லியன் பேர் வருகை தந்ததாக மேற்படி அருங்காட்சியக உத்தியோகத்தர் தெரிவித்தார்.
1911 ஆம் ஆண்டு இத்தாலிய அருங்காட்சியக ஊழியர் ஒருவரால் லோவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட இந்த ஓவியம், இரு வருடங்களின் பின் மீளக் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நபரொருவர் இந்த ஓவியத்தின் மீது அமில திராவகத்தை வீசியமை குறிப்பிடத்தக்கது
ம்ம் காலம்டா சாமி,