வட்ட முகம்
நல்ல நிறம்
தோளுயரம்
கூர்மையான, நிறை புத்தி
தன் காலில் நிற்கும் தாரம்- என
என் கையில் ஓடும் வரி பார்த்து
வரைந்துவிட்டான்
எனக்கென்று ஒருத்தியை
Sep 14, 2008
[+/-] |
எனக்கென்று ஒருத்தி |
[+/-] |
வாழ்த்துகின்றேன் எளிமையாய் |
புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும்
தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............
[+/-] |
சட்டென்று ஞாபகப்படுத்தும் சில |
என்றும் என்னுள்
உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சில
தினமும் நீ வந்த வழி நான் நடக்கையில்
நீ வந்து செல்லும் பேருந்தும்
உன் வருகையை பதிவு செய்ய
நீ இட்ட உன் கையெழுத்தும்
அறைச்சுவற்றில் உன் ரசனைக்கு
நீ ஒட்டி வைத்த படமும்
நீயும் நானும் சேர்ந்து நடக்கையில்
பாதம்படாமல் இருவரும்
தாண்டிசெல்லும்
பன்னீர்புஷ்பமும்
நம் நட்பில் நீ ரசித்து சொன்ன
இன்னும் பலவும்
உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சில
[+/-] |
வார்த்தை வல்லூறூகள் |
என் தாகத்திற்கு தண்ணீர்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தேடும் பொழுது
என்னைச்சுற்றி
ஏதோ ஒன்று
எனக்கு தண்ணீர் -இல்லை
வல்லூறூகளுக்கு நான்
[+/-] |
உன்னைப்போல் |
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
தமிழ் இலக்கியத்தில் வாசகம் தேடி நான்
யாசகம் நடத்தி
கிடைத்தவை கொண்டு
எழுதி முடிக்க
எதிரில் நீ
உன்னோடு ஒரு ஒப்பீடு
வரிகளும் மறைந்து
வாசகமும் மறைந்து
என் ஏடு முழுவதும்
அதன்பின்
மீதமிருப்பது
வெள்ளை தாள்
வெற்று புத்தகம்
நீ
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
முடியும்.
[+/-] |
மூன்றாம் பிறையாய் |
மூன்றாம் பிறையாய்
முதுகின் பின்னிருந்து
உன் முகம்................
மூன்றாம் பிறையாய்
கதவின் பின்னிருந்து
உன் முகம்................
மூன்றாம் பிறையாய்
குடையுள்ளிருந்து
உன் முகம்................
என்ன சொல்கிறாய் ?
இருட்டில்
நீயா?
நானா?
[+/-] |
உன்னிடமிருந்து வரும்போது |
சிறு வயதில் என் உடமைகளை
முழுமையாய் திரும்பியதில்லை
உன்னிடமிருந்து வரும்போது
என் முழு நீள பென்சில் திரும்பும்
பாதியாக,
உன்னிடமிருந்து வரும்போது
முழுமையான என் ரப்பர் துண்டுபட்டிருக்கும்
இரண்டு,மூன்றாய்
உன்னிடமிருந்து வரும்போது
எழுத வாங்கிய என் பேனா ஊனமுற்றிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது
ஊட்டமாயிருக்கும் என் நோட்டுப்புத்தகம்
பக்கங்கள் பாதியாயிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது
இப்பொழுது என் இதயமும்
இதுவரை என்னுடைமைகளை நீ
முழுமையாக திருப்பியதில்லை
[+/-] |
எனக்கு பிடித்தவைகள்...... |
இளங்காலை நேரம்
இளஞ்சூரியனின் நிறம்
இரவு நேர வானம்
புல்லின் நுனியில் பனித்துளி
மழை நின்ற இரவு
நீண்ட ஒத்தையடிப்பாதை
உடன் வானில் பொளர்ணமி நிலவு
தனிமையில் நான்(ம்).