Aug 27, 2009

சிரிப்பின் மீது கோபம்

பாருங்க நம்ம ஆளுகளுக்கு  அடுத்தவன் கொஞ்சம் சிரிச்சாவே பத்திக்கிட்டு எரியும்.

அதிலயும் பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்கள் சிரிச்சா போச்சு. இங்க இருக்கறவனும் நிம்மதியா இருக்க முடியாது.

இங்க ஒரு அம்மா சிரிப்புக்கே உதாரணமா, அதும் நூறாண்டுக்கும் மேல சிரிச்சிட்டே இருந்தா யாருக்குத்தான் கோபம் வராது.

செய்திய பாருங்களேன்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஓவியர் லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மோனாலிஸா ஓவியமானது, குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த ஓவியத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் இந்த ஓவியத்தைப் பார்வையிட 8.5 மில்லியன் பேர் வருகை தந்ததாக மேற்படி அருங்காட்சியக உத்தியோகத்தர் தெரிவித்தார்.


1911 ஆம் ஆண்டு இத்தாலிய அருங்காட்சியக ஊழியர் ஒருவரால் லோவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட இந்த ஓவியம், இரு வருடங்களின் பின் மீளக் கைப்பற்றப்பட்டது.


தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நபரொருவர் இந்த ஓவியத்தின் மீது அமில திராவகத்தை வீசியமை குறிப்பிடத்தக்கது

ம்ம் காலம்டா சாமி, 

Read More...

Jun 19, 2009

ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
(ஆறும் அது ஆழமில்லை...)
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!
(ஆறும் அது ஆழமில்லை...)
தண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,
ஆண்டவனை கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு,
அத்தனையும் ந‌டக்கும் அய்யா ஆச வெச்சா கிடைக்கும் அய்யா
ஆனா கிடைக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!

(ஆறும் அது ஆழமில்லை...)

Read More...

மச்சான் மச்சான் உன்மேலே

படம்: சிலம்பாட்டம்
பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்
வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்
ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே
தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்
மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள
கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்
மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்
சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே
என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இருக்குதே
பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே……
உன் பெயரைத்தான் சொல்லி தினம்
தாவணியை போட்டேனே
உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே
மானே அடி மானே
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள
கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்
மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்
ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே
அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்
அந்த நாளை மனசும் நினைக்குமே
கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே
என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே
உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
தேனே வந்தேனே
ஹே…ஹே…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள
கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்
மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

Read More...

பாடல் -

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
மண் வளர்த்த பொறுமை எல்லாம்
மனதில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரோ ஆரிராரோ...

Read More...

நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன் தான் விளைந்தது
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும்
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

Read More...

Jun 12, 2009

ஆரம்பிச்சவங்க நல்லா இருக்கனும்

என் வலைப்பூவ யாரும் படிப்பாங்கன்னு நான் நினைக்கல, இதில மாட்டி விட்ட பிரியா

அவங்க அர்ஜுன் பற்றி எழுதின, அவங்க அப்பா(பிரியா அப்பா) பற்றி எழுதின பதிவுகள் எனக்கு பிடிச்சுத்தான் என் மகளுக்குன்னு ஒரு வலைப்பூ எழுத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அவ வளர வளர வலைப்பூ காஞ்சு போச்சு.

மறுபடி பூக்க வைக்கனும்

பிரியா அவங்க சாட் சிக்னல் எப்பவும் சிவப்பா இருக்க நான் காரணும்னு நினைக்கிறேன். அதான் என்ன இப்படி மாட்டி விட்டுடாங்க.

சரி சமாளிப்போம்ன்னு இறங்கினேன்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அம்மா, அப்பா வச்ச பேருங்க. மகேந்திரன் ரெம்ப பிடிக்கும், நெருக்கமான நட்புகள் மகின்னு கூப்பிடுவாங்க,

சாட்ல பெண்ணுனு நினைச்சி பேசறவங்க அதிகம்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பிரபாகரன் இறந்துட்டார்ன்னு சொன்னப்ப

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம் சில நேரங்கள்ல

பல நேரங்கள்ல பிடிக்கும் பைத்தியம்  மத்தவங்களுக்கு

4.பிடித்த மதிய உணவு என்ன?

என் தங்கமணி சமை க்கும் எதுவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அய்யோ ரெம்ப குறைவு.

சைலண்டா நூல் விட்டு பார்ப்பேன். இல்லன்னா கட் 

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவில குளிச்சிருக்கேன் ஆனா பயம், (எங்க வீட்டு பூக்குழாய்ல(அதாங்க ஷாவர்) வர்ரதே அப்படித்தான்

கடல்ல நனைஞ்சிருக்கேன் பிடிக்கும்(பாண்டில, ம்கும்ம்ம்ம்ம்ம் கூட தங்கமணி வேற, இல்லைன்னா அங்கனயே இருந்திருப்பேன்)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முழுசா பார்ப்பேன், பேசும் போது கண், அப்புறமா அவங்க அங்க சேஷ்டைகள்(அதாங்க மேனரிசம்)

 

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது          : -          பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(உளறுவாய்ன்னு சொல்வாங்களே)

பிடிக்காதது     :-          பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(மனசு திறந்து பேசறது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

நான் எது சொன்னாலும் நம்பிடுவாங்க

அது பொய்ன்னு

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மாவின் அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெளிர் நீல ஜீன்ஸ், வெளுத்துப்போன வெளிர் நீல முழுக்கை சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கொஞ்ச நேரம் முன்னாடி என் பாஸ் பாடுன பா(தி)ட்டு. இப்பவும் காதில கேட்டுட்டே இருக்கு.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஒரு காலத்தில நாலு கலர்ல வந்துச்சே அது மாதிரி

14.பிடித்த மணம்?

குழந்தையுன் மேல் வீசும் பால் வாசம்

கல்யாண வீட்ல மல்லிகை வாசம் வீசும் பெண்கள் வசம்(கண்டிப்பா திரு மணம் இல்லீங்க)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

நான் யாரையும் அழைக்க விரும்பலை

 
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பிரியா எழுதின எல்லாப்பதிவும்.

அதுலயும் அவங்க எழுதினதுல ஆயுசு கம்மியான பதிவு ரெம்ப பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு?

பொண்ணோட விளையாடற எந்த விளையாட்டும்(என் பொண்ண சொன்னேன்ங்க)

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம் பிறந்ததிலிருந்தே, எங்க குடும்பத்த நம்பி ஒரு கடையே இருக்குன்னா பாருங்களேன் 3 தலைமுறையா.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சிந்து பைரவி, கன்னத்தில் முத்தமிட்டால், அபியும் நானும் மாதிரி

அப்புறம் கமல் படம் எல்லாமே

20.கடைசியாகப் பார்த்த படம்?

அதுக்கு இன்னும் காலம் இருக்கு, ஆனா சொல்ல நான் இருக்க மாட்டேன்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

(இதுல கொஞ்சம் குழப்பம், வயசா, இல்ல சீதோஷணமான்னு)

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சிவாஜி கணேசன்(வாழ்க்கை வரலாறு)

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (கிட்டதட்ட 6 மாசமா)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வீட்ல தோனும் போது என் பொண்ணு படம்

ஆபிஸ்ல நீலம்(வண்ணம்னு சொல்லவந்தேனுங்க)

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது :    டே லூசப்பா
பிடிக்காதது :    என் கைப்பேசியில் என் பெண் கூப்பிடாத போதுள்ள அமைதியான சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அதிகபட்சம் 600கிமி (நான் குண்டு சட்டில குதிரை ஓட்ற ஆள்)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய உளறுவேன்

 

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வேலை செய்யாம இருக்க ஆயிரம் காரணம் சொல்றது

 

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அதீத காமம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அமைதியான எந்த இடமும்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
தேவைக்கு அதிகமா ஏதும் இல்லாம இருக்கனும்னு

(ஆனா உடம்பு அதிகம்)


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வேலைக்கு போவது, கணினில நேரத்த தொலைக்கிறது

 

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

--

http://therakathal.blogspot.com
http://t2fcomputer.blogspot.com

Read More...

May 23, 2009

Test

Test

Read More...

Mar 26, 2009

பாவம் வேற என்ன சொல்ல

Read More...

Mar 4, 2009

அஜினமோட்டோ? ஆபத்து?

அதென்ன அஜினமோட்டோ? ஆபத்து? டாக்டர் கங்கா

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்ajumudடோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?
* அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.
* மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே?. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!
* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.


* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.

தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

4. சூப் பவுடர்கள்.
நன்றி: கூடல்.காம்

Read More...

Mar 1, 2009

ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 

Rupees1000 Rupees500

ரூபாய் 1000/- நோட்டு ரூபாய் 500/- நோட்டு

Rupees50Rupees100

ரூபாய் 50/- நோட்டு                                       ரூபாய் 100/- நோட்டு

Read More...

பட்ஜெட் எக்செல்லில்

http://office.microsoft.com/en-us/templates/CT101172321033.aspx


உங்களுடைய மாதாந்திர வரவு செலவு திட்டமிட அல்லது திட்டமிட்டு செலவு செய்ய உங்கள் கணனியில் உள்ள எக்ஸல் ஸீட்டை பயன்படுத்த முடியும்.... என்று உங்களுக்கு தெரியுமா?

ஓரு வருடத்திற்கான கணக்கு மற்றும் திட்டமிடல்..

டவுன்லேட் செய்யுங்கள் உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

மேல் உள்ள உள்ள எக்ஸல் ஸீட்டை டவுன்லேட் செய்ய இங்கு கிளிசெய்யவும்..

lawn & Garden ,Personal,Event

தனிப்பட்ட, குடும்ப,கல்யாணம் இப்படி பல வகைகளில் கிடைக்கிறது.

Read More...

Feb 14, 2009

மொழிபெயர்ப்பு ஜோக்: சிரிப்பதற்கு மட்டும்

ஜார்ஜ் புஷ் தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து, அடுத்து எந்த நாட்டின் மீது  படையெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது, தொலைபேசி மணி ஒலித்தது.

"ஹலோ மிஸ்டர் புஷ்!" தொலைபேசியில் ஒரு கனத்த குரல் சொன்னது, "நான் பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தில் பக்வாரா-விலிருந்து குர்முக் பேசுறேன். அதிகாரபூர்வமாக உங்கள் நாட்டின் மீது
போர் தொடுக்கப் போகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

"சரி குர்முக்" புஷ் சொன்னார், "இது உண்மையிலேயே முக்கியமான செய்தி தான்.  உன்னுடைய ஆர்மி எவ்வளவு பெரியது?"

"இந்த நிமிடம் என்னிடம்" குர்முக் ஒருமுறை மனதில் கணக்குப்
போட்டுக்கொண்டே,"நான், என் சித்தப்பா மகன் சுக்தேவ், என் பக்கத்து வீட்டு பகத், அப்புறம் குருத்வாரா கபடி டீம், ஆக மொத்தம் 8 பேர்" என்று பதில் சொன்னார்.

புஷ் சொன்னார், "குர்முக், நான் விரலசைத்தால் போதும், என் கட்டளையின் கீழ் உள்ள  ஒரு மில்லியன் ஆர்மி உங்களைத் துவம்சம் செய்து விடும்".

"அரே ஓ..." குர்முக் சொன்னார், "ஒரு மில்லியனா, நான் உங்களைத் திரும்பவும்  கூப்பிடுகிறேன்"

சொன்னது போல், மறுநாள் நமது குர்முக் மறுபடியும் புஷ்ஷை அழைத்தார்.

"மிஸ்டர் புஷ்", நான் பக்வாரா எஸ்.டி.டி.யிலிருந்து குர்முக் பேசுறேன். நான்
சொன்னபடி போர் உண்டு.

இப்பொழுது நாங்கள் கொஞ்சம் தரைப்படை கருவிகள் வாங்கி விட்டோம்".

"என்ன கருவிகள்-னு கொஞ்சம் சொல்லுங்க குர்முக்" புஷ் கேட்டார்.

"அதுவா, ஒரு கழுதை மற்றும் ஒரு மஹேந்திரா டிராக்டர்"

புஷ் கூச்சப்பட்டார், "குர்முக், எங்களிடம் 16000 ஆர்மி டேங்க்குகள் மற்றும்
14000 ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் வண்டிகள் உள்ளன. அது மட்டும் இல்லை. நாம்  கடைசியாக பேசியதிலிருந்து எங்கள் தரைப்படையின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியனாகி  விட்டது."

"ஓ... தேரி..." குர்முக் சொன்னார், "நான் மறுபடியும் கூப்பிடுகிறேன்"

சொன்னபடியே, குர்முக் மறுநாளும் தொலைபேசினார்.

"மிஸ்டர் புஷ், அறிவித்தபடி போர் நிச்சயம் உண்டு. இப்பொழுது நாங்கள்
வானத்திலிருந்து தாக்குவதற்கும் தயாராகிவிட்டோம். மஹேந்திரா டிராக்டரில் இரண்டு  கன் வச்சிருக்கோம். அதுல ஒரு ஜெனரேட்டரைப் போட்டு, ரெண்டு இறக்கையை மாட்டி  விட்டிருக்கோம். மால்பூர்-லிருந்து இரண்டு ஸ்கூல் பாஸ் பசங்களும் எங்களோடு  சேர்ந்திருக்காங்க"

புஷ் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்து விட்டு, பின் தொண்டையைக் கனைத்துக் கொண்டு  சொன்னார்," குர்முக், எங்களிடம், 10000 பாம்பர் ஜெட்களும், 20000 பைட்டர்  ஜெட்களும் உள்ளன. எங்களின் பாதுகாப்பு லேசரால் இயக்கப்படும் தரையிலிருந்து  ஆகாயம் செல்லும் ஏவுகணைகளால் கவரப்பட்டுள்ளது. அப்புறம், நான் உங்களிடம்
கடைசியாக பேசியதிலிருந்து, எங்களின் ஆர்மியின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாகி  விட்டது."

"தேரி..."குர்முக் சொன்னார், "நான் மறுபடியும் உங்களைக் கூப்பிடுகிறேன்".

சொன்னபடி, மறுநாள் குர்முக் மறுபடியும் தொலைபேசினார்.

"மிஸ்டர் புஷ்! இந்த போரை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது" குர்முக் சொன்னார்.

"இதைக் கேட்பதில் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது" சொன்னார் புஷ், "ஏன் இந்த  திடீர் மாற்றம்?  ஏன் உங்கள் முடிவை மாற்றிக் கொண்டீர்கள்"

"அதுவா" குர்முக் சொன்னார், "நாங்கள் லஸ்ஸி குடித்தபடியே ஒரு பெரிய மீட்டிங்  போட்டோம். அப்போ எல்லாரும் சொன்னாங்க, 'நம்மால இரண்டு மில்லியன் சிறைக் கைதிகளை  எப்படி வைக்க முடியும்? அவர்களுக்கு எப்படி சாப்பாடு கொடுக்க முடியும்-னு'  அதனால போர் வேண்டாம்-னு முடிவெடுத்தோம்"

இதற்குப் பெயர் தான் இந்திய நம்பிக்கை.

______________________________________________________________

George Bush was sitting in his office wondering whom to invade next when his  telephone rang.

"Hello, Mr. Bush!" a heavily accented voice said, "This is Gurmukh from  Phagwara, District Kapurthala, Punjab .... I am ringing to inform you that  we are officially declaring the war on you!"

"Well, Gurmukh," Bush replied, "This is indeed important news! How big is  your army"

"Right now," said Gurmukh, after a moment's calculation, "there is myself, my cousin Sukhdev, my next door neighbor Bhagat, and the entire kabaddi team from the gurudwara. That makes eight"

Bush paused. "I must tell you, Gurmukh that I have one million men in my army waiting to move on my command."

"Arrey O! Main kya.." said Gurmukh. "I'll have to ring you back!"

Sure enough, the next day, Gurmukh called again.

"Mr. Bush, it is Gurmukh, I'm calling from Phagwara STD, the war is still  on! We have managed to acquire some infantry equipment!"

"And what equipment would that be, Gurmukh" Bush asked.

"Well, we have two combines, a donkey and Amrik's tractor."

Bush sighed. "I must tell you, Gurmukh, that I have 16,000 tanks and 14,000 armored personnel carriers. Also, I've increased my army to 1-1/2 million  since we last spoke."

"Oh teri...." said Gurmukh. "I'll have to get back to you."

Sure enough, Gurmukh rang again the next day.

"Mr. Bush, the war is still on! We have managed to get ourselves  airborne.... .. We've modified Amrik's tractor by adding a couple of  shotguns, sticking on some wings and the pind's generator. Four school pass
boys from Malpur have joined us as well!"

Bush was silent for a minute and then cleared his throat. "I must tell you, Gurmukh, that I have 10,000 bombers and 20,000 fighter planes. My military complex is surrounded by laser-guided, surface-to-air missile sites. And
since we last spoke, I've increased my army to TWO MILLION!"

"Tera pala hove...." said Gurmuk, "I'll have to ring you back."

Sure enough, Gurmukh called again the next day.

"Kiddan, Mr.Bush! I am sorry to tell you that we have had to call off the war."

"I'm sorry to hear that," said Bush. "Why the sudden change of heart"

"Well," said Gurmukh, "we've all had a long chat over a couple of lassi's, and decided there's no way we can feed two million prisoners of wars!"

NOW THAT'S CALLED INDIAN CONFIDENCE

Read More...

Feb 11, 2009

புதிர் கணக்குகள் 1

பம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன் பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்செழியன், தமிழ்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்புக்கு சென்றார்.

நிலையத்தில் நுழைந்ததும் எடைப்பொறியை பார்த்த மாறன், “ தாத்தா எடை பார்க்கவேண்டும், ரூ.1 க்.கொடுங்கள் என்று கேட்டான்.

தாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப்பொறியில் ஏறினான். “ நானும் கூட நிற்பேன்” என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான்.  வந்து விழுந்த எடை அட்டை 66 கிலோ காட்டியது.

அடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடு ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 70 கிலோ காட்டியது.

மூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப்பொறியில் நிற்கச் செய்ய, எடை 70 கிலோ காட்டியது.

இரயில் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.

மகனை அழைத்துக்கொண்டு வரும்பொழுது பேரன்களின் கைகளில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ்னேசன் “ டேய் பிளாட்பாரம் டிக்கட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

”மாமா இது பிளாட்பாரம் டிக்கட் அல்ல, எடை அட்டை” என்றார்கள்.

அட்டைகளை வாங்கிபார்த்த தமிழ்நேசன், அதில் எடை போட்டு இருப்பதை பார்த்து “இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா?” என்றார்.

அவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்ததை கூறினார்கள்.

“ மாமா நாங்கள் தனித்தனியாக எடை பார்க்க வேண்டும், ரூபாய் கொடுங்கள்” என்றான் செல்வன்.

நான் கணக்கு பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்றூ தமிழ்மாறன், செல்வம்,செழியன் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ்னேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி/.

 

அந்த 3 எடை அட்டைகளை வைத்து  தனித்தனியாக எடையை உங்களால் கூற முடியுமா?

Read More...

Feb 3, 2009

'ஹாஸ்ய யோகா'!

*மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'! *
'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பதை எவராலும் மறுக்க இயலாது.
இந்த எளிய வழியினால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன நலமும் காக்கப்படும்
என்பது தனிச் சிறப்பாகும்.

வேலைப் பளு நிறைந்த சூழலில், மன அழுத்தம், பதற்றம் முதலிய மனநல பாதிப்புகள்
எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட, உளவியல் மருத்துவர்கள் பலரும் பரிந்துரைக்கும்
ஒன்றாகவே 'ஹாஸ்ய யோகா' உள்ளது.

'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ
நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்' என்று யோகா ஆசிரியர் ஒருவர்
கூறுகிறார்.

இப்படி சிரிப்பில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமல், 'தொடர்ந்து 20 நொடிகளுக்கு
வாய்விட்டு, வயிறு வலிக்க சிரித்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது' என்கிறது
ஓர் ஆய்வு.

மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவற்றை போக்கவல்ல 'ஹாஸ்ய யோகா', நோய்
எதிர்ப்பு சக்திக்கும், இதயத்தின் இயக்கத்துக்கும், தசைகள் வலுவாக
இருப்பதற்கும் துணைபுரிகிறது.

இத்தகையை வல்லமை கொண்ட சிரிப்பை தினம் தினம் சிந்திக் கொண்டே இருப்பது சாலச்
சிறந்தது. இந்த விஷயத்தில், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் பிரகாஷ்
ராஜ் கதாப்பாத்திரத்தை பின்பற்றுவதும் தவறில்லை.

Read More...

Feb 1, 2009

திரு. நாகேஷ் அவர்களுக்காக …

31nagesh1

வாழ்க்கை குறிப்புஜனவரி 31:


              கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.


          சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அnagesh  1மெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.


    கே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.


      தேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்தnagesh 2து.
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும்.  நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

 

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பதிவு  செய்தவரும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவருமான நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.31nagesh3

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர்.

தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ ராகங்கள், மக்கள் என் பக்கம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் என நாகேஷின் நடிப்புத் திறனைப் பறைசாற்றும் படங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது!

 

"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you. நடிகர் நாகேஷ் தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காகதற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது அன்பாக ஒத்துளைத்ததோடு, விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.
திருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.
நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவை இங்கே தருகின்றேன். ஒலி வடிவை நாளை பகிர்கின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.


வானொலி: வணக்கம் நாகேஷ் சார்

நாகேஷ்: வணக்கம் சார்


வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு

வானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்
நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க

வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.
நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய

வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன், சார். உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?

வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமியும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கைதான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.
வானொலி: நீங்கள் நடித்த முதல் படம்?
நாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்

வானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.
இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.

வானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.
எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.
ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1. நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம். நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி.... செத்துடணும்... on the spot. ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே.... அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான். மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.

வானொலி: உங்க குறிக்கோள் என்ன?
நாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்தர் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.
அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.
அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புறம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும். இப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.

வானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?  We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.

வானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான். ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.
மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வைக்கணும்; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

வானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாகேஷ்: நண்பரே! ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.
"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you

Read More...

Jan 30, 2009

குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி Print E-mail
பெண்கள் ஸ்பெஷல் - மகளிர் மன்றம்
குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி தெரிந்துகொள்ளனுமா?

குழந்தை பிறந்த முதல் 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.

தாய் பால் மட்டுமே கொடுத்தால் போதும் அதிலே எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்.

முதல் 4 மாதம் முடிந்த பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுத்துக்கொண்ட்டே தண்ணீர் மற்ற ஆகாரங்களும் கொடுக்கலாம்.பிஸ்கட் சிறிது வார்ம் வாட்டரில் நனைத்துக்கொடுக்கலாம் குழந்தைகளுக்கு முழுங்குறதுக்கு தெரியவரும்.ஆரம்பத்தில் விழுங்குவதுக்கு கஷ்டமாக இருந்தாலும் கொடுக்க கொடுக்க பழகிடுவாங்க ஆரம்பத்திலேயே தண்ணீர் ஒருவாய் ஆகாரம் (ஆகாரம் எதுவாக இருந்தாலும்) ஒருவாய் என்று பழக்க படுத்திவிடாதீர்கள் அதுவே கடைசிவரை பழக்காமாகிவிடும்.

பிஸ்கட்டை கொடுக்கும் போது முதல் ஒரு பிஸ்கட்டில் இருந்து ஆரம்பிக்கவும். குழந்தை சாப்பிட ஆரம்பித்தால் அடுத்த நாள் 2 அப்படியே விரும்பிவிட்டால் பிஸ்கட்டின் அளவை கூட்டிக்கொண்டு போகலாம்.

முதலில் தண்ணீரில் நனைத்து நன்கு பேஸ்ட் மாதிரி பண்ணிவிட்டு கொடுங்கள் விழுங்குவதற்க்கு லேசாக இருக்கும். அதன் பிறகு பவுடர்மில்க் கொடுத்தால் அதைலேயே பிஸ்கட்டை குழைத்துக்கொடுக்கலாம்.

1 வயது வரை பசும்பால் குழந்தைகளுக்கு சேர்கக்கூடாது என்று டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவும் ஆண்பிள்ளைகள் என்றால் செமியா குணம் வாயு தொல்லைகள் கண்டிப்பாக வரும் அதனால் 1 வயது நிறைந்த பின்னாடி பசும் பால் ஆரம்பிக்கலாம்.

எப்பொழுதும் ஒரு உணவு கொடுத்துக்கொண்டு இருக்கும் போது மற்ற உணவை உடனே ட்ரை பண்ணக்கூடாது. ஒரு உணவு கொடுத்து ஒரு வாரம் கழிந்ததுக்கப்புறம் தான் மற்ற உணவை ட்ரை பண்ணனும் உடனுக்குடன் சேர்த்து கொடுத்தால் வாந்தி அல்லது வயிற்று வலி வந்தால் எல்லாவற்றயுமே நிறுத்தும் படி ஆகிவிடும் எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று தெரியாது.அதனால் குழந்தையின் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்து கொடுக்கலாம்.

5 ஆவது மாதத்தில் நெஸ்டம்,செரிலாக் கொடுக்கலாம்.டின் ஃபுட்டை விட வீட்டில் தயாரித்துக்கொடுக்கும் உணவே மிகவும் சிறந்தது.

இட்லி,ஆப்பம்(நடு பகுதி மட்டும்) போன்றவை 6 மாதத்தில் கொடுக்கலாம். எது முதலில் கொடுப்பதாக இருந்தாலும் காலையிலே ட்ரை பண்ணிவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக்கொண்டால் இரவு கொடுத்து பழக்கலாம் எதுவுமே இரவில் புதிதாக ட்ரை பண்ணி பார்க்க வேண்டாம்.பகலிலே ட்ரை பண்ணவும்.

6 மாதத்தில் குழந்தைகளுக்கு சூப், அப்புறம் சாதம் எல்லாம் ட்ரை பண்ணலாம். எந்த உணவு கொடுத்தாலும் தாய்ப்பாலை மட்டும் நிறுத்திவிடாதீர்கள் குறைந்தது 1 1/2 வயதுவரைக்குமாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்பால் குடிக்காத குழந்தைகளை விட தாய்பால் குடித்து வளரும் குழந்தைகள் தான் எல்லா விதத்திலுமே அறிவாளியாக இருப்பார்கள். நம் குழந்தைகள் நல்ல ஆக்டிவாக இருந்தால் நமக்கு தானே சந்தோஷம்.இப்பொழுது எல்லாம் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தே நிறைய தாய்மார்கள் தாய்பால் கொடுக்க மறுக்கின்றனர். உண்மையில் தாய்பால் கொடுக்காத தாய்மார்களை விட தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குதான் அழகு கூடுகிறது என்று சொல்கிறார்கள். தாய் பால் கொடுக்காதவர்களுக்குத்தான் மார்பக புற்று நோய் அதிகமாக வருகிறதாம்.

சூப் தயாரிக்கும் முறை:
கேரட் ஒரு துண்டு,உருளைகிழங்கு ஒரு துண்டு,பீன்ஸ் 1 ,வெள்ளைபூண்டு 1 பல்,இவற்றை தோல் நீக்கிவிட்டு சோம்பு ஒரு பின்ச்,சீரகம் ஒரு பின்ச்சேர்த்து இவற்றை நன்கு வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து தேவை என்றால் ஒரு துளி உப்பு போட்டு குழந்தைகளுக்கு காலை சமயம் 11 மணிக்

கு கொடுக்கலாம். 7 மாதத்தில் அந்த காய்கறியை நன்கு தண்ணீருடன் மிக்ஸியில் அடித்தும் கொடுக்கலாம் திக்காக இருக்கும் குழந்தைகளுக்கு டேஸ்டும் புதிதாக இருக்கும்.ஒரு நாள் காய்கறி சூப் என்றால் மறு நாள் ஜூஸ் கொடுக்கலாம் ஆரஞ்சு ஒரு பழத்தை பிழிந்து சுடு தண்ணீர் சிறிது ஊற்றி கொடுக்கலாம் சளி,இருமல் ஏற்படாது.

குழந்தைகளுக்கு சீனி சேர்ப்பதால் அடிக்கடி சளி இருமல் தொந்தரவு ஏற்படும் சீனிக்கு பதில் கற்கண்டை திரித்துவைத்து அதை சேர்த்துக்கொடுக்கலாம்.

சாப்பாடு தயாரிக்கும் முறை
அரிசி சிறிது,துவரம் பருப்பு சிறிது அல்லது சிறு பருப்பு,கேரட் பாதி உருளைகிழங்கு பாதி,பீன்ஸ் 1,வெள்ளை பூண்டு 2 பல், உப்பு சிறிது சேர்த்து இவற்றை நன்கு வேகவைத்து மசித்து மதியம் சாப்பாட்டுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் 4 நாள் கழித்து எல்லா சாமான்களையும் கூட்டிக்கொள்ளலாம்.8 மாதத்தில் இருந்து மசித்துக்கொடுக்காமல் அப்படியே கொர கொரப்பாகவே கொடுத்து பழக்கலாம்.

9 வது மாததில் முட்டை கொடுக்கலாம் ஆனால் சில குழந்தைகளுக்கு 9 மாதத்தில் முட்டை கொடுப்பதால் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வருவதாக சொல்கிறார்கள் அதனால் 1 வயதுக்கு பினாடியே கொடுப்பது நல்லது.

1 வயதில் சிக்கனில் சூப் செய்து கொடுக்கலாம். ஈரல் வேகவைத்த தண்ணீர் கூட கொடுக்கலாம் மிகவும் நல்லது.

2 வயது நிறைந்த பிறகு நாம் சாப்பிடும் சாப்பாட்டையே முழு உணவாக இல்லாமல் சிறிதாக ஊட்டி பழக்கலாம்.அவங்களுடைய சாப்பாட்டின் டேஸ்ட் பிடிக்காமல் இருந்தால் நம்முடையதே விரும்பி சாப்பிட்டால் 2 வயதிலேயே பழக்கிவிடலாம்.

பல் முளைக்கும் முன் கைலேயே பிஸ்கட்,ரஸ்க் கொடுத்து கடிக்க பழகி கொடுக்கலாம்.பக்கத்தில் நாமும் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் குழ்ந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு முன்னாடியே சாப்பாட்டை கொடுத்துவிட்டு இரவு 11 மணிக்கு பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள். அப்படி கொடுத்தால் நடு இரவில் பசித்து அழாது சில குழந்தைகள் இரவில் பல தடவை முழித்து அழும் ஏன் அழுகிறது எதனால் என்றும் தெரியாது. உடம்பு சரில்லாத நாட்களை தவிர மற்ற நாட்களில் அவர்களுக்கு இடையில் முழிப்பு வராது வயிரும் பசி எடுக்காது திரும்ப காலையில் 6 மணிக்கு பால் கொடுத்தாலே போதும்.

குழந்தைகளுக்கு பல் வந்த பிறகு இரவில் பால் கொடுத்து தூங்க வைப்பதாக இருந்தால் சிறிது தண்ணீர் கொடுத்துவிடுங்கள். பாட்டலில் கொடுக்கும் வரை தூக்கத்திலேயே கொடுத்துவிடலாம்.

ஆனால் 21/2 வயதுக்கு பின் கிளாஸில் பழக்கப்படுத்திவிடவும். இப்பொழுது குழந்தைக்கு 1 வயதுக்கு பின்னடியே நிறைய பேர் பால் பாட்டிலை நிறுத்திவிட்டு குழந்தை பால் குடிக்க மாட்டிக்கிறது என்று புலம்புகிறார்கள். பால் பாட்டிலை க்ளீன் செய்து அதை வெந்நீரில் போட்டு சுத்தம் செய்யும் வேலைக்கு எரிச்சல்பட்டு பால் பாட்டிலை நிறுத்தினால் குழந்தைகள் எதுவும் சாப்பிட்டவிட்டால் கூட பாலையாவது குடித்துவிடுவார்கள்.ஆனால் பாட்டலை நிறுத்திவிட்டு குழந்தை பாலும் குடிக்க மாட்டிகிறது என்று புலம்புவதில் அர்த்தமில்லை.ஆனால் பாட்டலில் கொடுக்கும் போது அடிக்கடி பாட்டல், நிப்பிலை மாற்றிவிட வேண்டும் க்ளீனிங் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது உள்ள குழந்தைகள் கிட்ட ஈஸியாக சொல்லி புரியவைக்கலாம் பாட்டலில் பால் குடித்தால் நீ இன்னும் பெரிய ஆளாக ஆகமுடியாது எல்லாரும் பேட்னு சொல்லுவாங்கன்னு ஒரு வாரத்துக்கு சொல்லி கொடுத்தால் அவங்களாகவே மறந்துடுவாங்க.


குழந்தைகளின் உணவுகொடுக்கும் நேரம்.1 வயது குழந்தைகளுக்கு

காலையில் 6 மணிக்கு பசும் பால் கொடுக்கலாம்.தாய்பாலும் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு பசி எடுக்கும் சமயம் எல்லாம் கொடுத்துக்கலாம்.

திரும்ப 8 மணிக்கு திரும்பவும் பால் அல்லது இட்லி, சாம்பார் காரமில்லாமல் ஊற்றிக்கொடுக்கலாம் அல்லது தேன் வைத்துகூட கொடுக்கலாம்.ராகி கூல்,சத்துமாவு ஏதாவது ஒன்னு இல்லைன்னா பிரெட் பாலில் ஊறவைத்தும் கொடுக்கலாம்.

ஒரே மாதிரி உணவை கொடுக்காமல் மற்றி மாற்றி கொடுக்கலாம்.

11 மணிக்கு ஏதாவது ஜூஸ் அல்லது காய்கறி,சிக்கன்,அல்லது ஈரல் சூப் ஏதாவது கொடுக்கலாம்.

1 மணிக்கு காய்கறி சாதம் கொடுக்கலாம்.திரும்ப 4 மணிக்கு பால் கொடுக்கலாம்.6 மணிக்கு பிஸ்கட்,ரஸ்க் கொடுக்கலாம்.பின் இரவு 8 மணிக்கு இட்லி,ஆப்பம்,பிரெட் பிடித்தது எதுன்னு தெரிந்துக்கொண்டு கொடுக்கலாம்.

திரும்ப இரவு 11 மணிக்கு பால் கொடுக்கலாம்.

Read More...

Jan 17, 2009

கண்தானம்

கண்தானம்

கண் தானத்திற்கு எழுதி வைத்தால் வீணாகப்போகாமல் கண் தேவைப்படும் யாருக்கேனும் உபயோகப்படலாம். இறப்பிற்கு பின் 6 மணி நேரத்திற்குள் கண் தானம் செய்யப்பட வேண்டும்.


கண் தானம் நல்ல முறையில் நடக்க கீழ்க்கண்ட செயல்கள் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


* இறந்தவரின் கண்ணின் மேல் ஈரப்பஞ்சை வைத்திருத்தல்


* இறந்தவரின் நேர் மேலே மின் விசிறி இருக்குமானால் அதை இயங்காமல் வைத்திருந்த்தல்


* இறந்தவரின் கண்ணில் தொற்று வராமல் தடுக்க antibiotic கண் சொட்டுக்களை விடுதல்


* முடிந்தால் இறந்தவரின் தலையை 6 இன்சுகளுக்கு உயர்த்தி வைத்தல்..


மேலும் விபரங்களுக்கு சென்னையில், சங்கர நேத்ராலயாவில் இயங்கி வரும் C U Shah கண் வங்கியை 28271616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும். சுட்டி

Read More...

Jan 14, 2009

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன் அவர் எழுதிய "செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளார்.

"மூக்குத்தி அணியாத பெண்,
நட்சத்திரம் இல்லாத வானம்.
கூந்தலைக் குறுக வெட்டிக்கொண்ட பெண், கீற்றில்லாத தென்னை மரம்.
கையில்லாத ரவிக்கை அணியும் பெண்,
உறை இல்லாத வாள்.
குதிகால் செருப்பணியும் பெண்,


ஆதிவாசிகளின் நாகரிகப் பதிப்பு!"

 

இன்னும் சொல்கிறார்:

 

"பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பெண்ணை, "வஞ்சி'' என்றழைத்தார்கள்.

பெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம், "கன்னி"  என்றழைத்தார்கள்.

காதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரிக் கடலில் விழுந்து செத்தவர் களெல்லாம், "குமரி" என்றழைத்தார்கள்.

மது அருந்திய பின், மனது 'கால்' வாங்கியதால், "மாது" என்றழைத்தார்கள்.

உள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதனால் அவள் "இல்லாள்" என்றழைக்கப்பட்டாள்!"

(இதைப் படித்தபோது எனக்கும் சில பெயர்க் காரணங்கள் கற்பனையில் உதித்தன.
அவைகளையும் சொல்லிவிடலாமா?)

நங்கை: கணவன் மீதுள்ள கோபத்தை பிள்ளைகளிடம் காட்டி, அவன் முன்னாலேயே அவர்களை "நங்கு..நங்கு" என்று குத்துவதால்....

மங்கை: கல்யாணத்துக்கு முன் மகிழ்ச்சியோடு இருந்த இளைஞர்களின் மனத்தை, கல்யாணத்துக்குப் பின் "மங்கச் செய்து விடுவதால்"........

சீமாட்டி: "சீ! இவளுக்கு கணவனாய் வந்து 'மாட்டி'க்கொண்டோமே!" என்று சில கணவர்கள் நினைப்பதால்.....

 

கண்ணதாசன் இன்னும் சொல்கிறார்.......

 

1.   "குடித்த பிறகு ஒரு பெண்ணை நேருக்கு நேர் வர்ணிப்பதில் ஆனந்தம் அதிகம். அதையே, அவள் நிதானமான நேரத்தில் நினைவுபடுத்தும்போது....ஆத்திரம் அதிகம்!"

2.   இலக்கியத்தில் "பிரிவாற்றாமை" என்னும் பகுதி பெண்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு அது இல்லாததற்குக் காரணம் இப்படியும் இருக்கலாம்: 'மனைவியைப் பிரிந்திருப்பதுதான் அவர்களுக்குச் சந்தோஷமா?'

3.   சம்பாதிக்காத மனைவி, சம்பாதிக்கும் கணவனை மிரட்டுவதற்குப் பெயர் "குடும்பம்". புத்தியில்லாத மந்திரி, புத்தியுள்ள மந்திரியை
மிரட்டுவதற்குப் பெயர் :ஜனநாயகம்"!

4.   "நீலகண்டன்" என்று இறைவனை அழைப்பது அவன் கழுத்திலிருக்கும் விஷத்துக்காக. "நீலவிழி" என்று பெண்களை அழைப்பது....அவர்கள் கண்களில் இருக்கும் 'விஷத்து'க்காக!

5.   கல்யாணம் ஆன பிறகு ஓரு கவிஞன் இப்படிச் சிந்தித்தான்: "கற்பனையில் ஒரு பெண்ணைப் பற்றி வர்ணிக்கும்போதும், காதலைப் பற்றிப் பாடும்போதும்..அடடா! எவ்வளவு சுவையாக இருக்கிறது!

 

(அடடா! அனுபவிச்சு எழுதியிருக்கீங்க கவியரசரே!)

 

Read More...

கடவுள் நம்பிக்கை

லண்டன்:புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள்
நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர் களாக இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள
இந்த தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.புத்திசாலித்தனம்
மிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்
கை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டுவிடுவதாகவும்
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்கு காரணம்,

புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித் தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை
கிளப்பியது. மற்றவர்களை விட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதா கவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

        புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவீதத்தினர் மட்டுமே இறைநம்பிக்கையும், மத
நம்பிக்கையும் கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவீதம் பேர் இறை நம்பிக் கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில்,இதில்இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும்,மதநம்பிக்கையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் லின், "ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரியளவில் உள்ளது. ஆனால், இவர் கள் பருவ வயதுக்கு வரும் போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக் கையை கைவிடுகின்றனர்.

"ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர்.மற்றவர்களை விட, நன்றாக படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையை கைவிடுகின்றனர். "இதற்கு காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும்,
நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதே போல, பொது மக்கள் மத்தியிலும்
புத்திசாலித்தனமானோர் மத்தியில் இறை நம்பிக்கை இல்லை' என்று
விளக்கியுள்ளார்.

Read More...

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

 


நட்சத்திரங்கள் --         அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


01. அஸ்வினி --          ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி --                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை --         ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி --            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் --      ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - -    ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் --          ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் --                  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் --        ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் --                  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் -                    ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் -             ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் -               ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை -            ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி -               ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் -           ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் -            ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை -           ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் -              ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் -            ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் -     ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் -  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் -       ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் -             ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி -        ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி     ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி -             ஸ்ரீ அரங்கநாதன்.


மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்கள் - கிரகம் – தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது – வினாயகர்

9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலட்சுமி

Read More...

விக்கிரகங்களை கருங்கல்லில் செய்கிறார்கள்.

விக்கிரகங்களை கருங்கல்லில் செய்கிறார்கள்.

tblgeneralnews_40568178893
இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகியவை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத்தைத் தன்னிடம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.

கல்லிலே நீர் இருப்பதால் தன் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது

கல்லிலே நிலம் எனும் பூதம் உள்ளது.

இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம்பூதங்களும் அடங்கிய கல்லில் வடித்து வழிபடுவது சிறப்பாகும்.

கரடு முரடான ஓசை எழுப்பும் பாறைகள் ஆண் தெய்வங்களுக்கும், ஓசை எழுப்பாத பாறைகள் பிற வேலைகளுக்கும் பயன்படுகின்றன.

இதிலிருந்து கிடைக்கும் சக்தியை முழுமைப்படுத்த தான் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஸ்தூல வடிவாக இருக்கிற விக்கிரகங்களுக்கு ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் கும்பாபிஷேகம்.

கோயில்களுக்கு சென்று வழுபடுவதால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்த்தன் மூலம் கீழ்கண்டபடி

விஞ்ஞான உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

murugan_side

“ஒத்த அதிர்வுறும் காற்று மண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர்வென் உடைய (அதிர்வெண் என்பது ஒரு உலோகம் ஒரு வினாடிக்கு எவ்வளவு முறை அதிர்வடைகிறது என்பதைக் குறிப்பது) ஒலிக்கு பெரும் ஓசை எழுப்பவல்லது.”

என்பது விஞ்ஞான உண்மை.

Read More...

முத்தம்

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

kissing-9

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

lips

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

2004.lips

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

 

3499 6; 7%7Ffp344)nu=3233)553);4 )2324553(3;38 ot1lsi

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

sweet-7408

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

ist2_105738-lip-print-vector

நன்றி

http://athisha.blogspot.com/2008/08/blog-post_7616.html

Read More...

Jan 13, 2009

பொங்கல்

அனைவருக்கும் இனிய தமிழர்தின வாழ்த்துக்கள்

image007தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் image007

pongal1 

 

pongal2

Read More...

Jan 11, 2009

தெரிந்து கொள்ளுங்களேன்....

பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.
பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.
குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய்கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.

Read More...

Jan 10, 2009

தமிழகத்தின் ஆறுகள்

மாவட்டங்கள்
ஆறுகள்

சென்னை
கூவம்,அடையாறு,பர்க்கிங்காம் கால்வாய்,ஓட்டேரி கால்வாய்கள

கடலூர்
தென்பெண்ணை,கெடிலம்

விழுப்புரம்
கோமுகி

காஞ்சிபுரம்
அடையாறு,செய்யாறு,பாலாறு

திருவண்ணாமலை
தென்பெண்ணை,செய்யாறு

திருவள்ளூர்
கூவம்,கொடுதலையாறு,ஆரணியாறு

கரூர்
அமராவதி

திருச்சி
காவிரி,கொள்ளிடம்

பெரம்பலூர்
கொள்ளிடம்

தஞ்சாவூர்
வெட்டாறு,வெண்ணாறு,கொள்ளிடம்,காவிரி

சிவகங்கை
வைகையாறு

திருவாரூர்
பாமணியாறு,குடமுருட்டி

நாகப்பட்டிணம்
வெண்ணாறு,காவிரி

தூத்துக்குடி
ஜம்பு நதி,மணிமுத்தாறு,தமிரபரணி

தேனி
வைகையாறு

கோயம்புத்தூர்
சிறுவாணி,அமராவதி

திருநெல்வேலி
தாமிரபரணி

மதுரை
பெரியாறு,வைகையாறு

திண்டுக்கல்
பரப்பலாறு,வரதம்மா நதி,மருதா நதி

கன்னியாகுமரி
கோதையாறு,பறளியாறு,பழையாறு

இராமநாதபுரம்
குண்டாறு,வைகை

தருமபுரி
தொப்பையாறு,தென்பெண்ணை,காவிரி

சேலம்
வசிட்டா நதி ,காவிரி

விருதுநகர்
கெளசிகாறு,வைப்பாறு,குண்டாறு,அர்ஜுனாறு

நாமக்கல்
உப்பாறு,நெய்யல்,காவிரி

ஈரோடு
பவானி,காவிரி

Read More...

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது