லண்டன்:புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள்
நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர் களாக இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள
இந்த தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.புத்திசாலித்தனம்
மிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்
கை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டுவிடுவதாகவும்
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்கு காரணம்,
புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித் தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை
கிளப்பியது. மற்றவர்களை விட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதா கவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவீதத்தினர் மட்டுமே இறைநம்பிக்கையும், மத
நம்பிக்கையும் கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவீதம் பேர் இறை நம்பிக் கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில்,இதில்இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும்,மதநம்பிக்கையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் லின், "ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரியளவில் உள்ளது. ஆனால், இவர் கள் பருவ வயதுக்கு வரும் போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக் கையை கைவிடுகின்றனர்.
"ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர்.மற்றவர்களை விட, நன்றாக படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையை கைவிடுகின்றனர். "இதற்கு காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும்,
நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதே போல, பொது மக்கள் மத்தியிலும்
புத்திசாலித்தனமானோர் மத்தியில் இறை நம்பிக்கை இல்லை' என்று
விளக்கியுள்ளார்.