கவியரசு கண்ணதாசன் அவர் எழுதிய "செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளார்.
"மூக்குத்தி அணியாத பெண்,
நட்சத்திரம் இல்லாத வானம்.
கூந்தலைக் குறுக வெட்டிக்கொண்ட பெண், கீற்றில்லாத தென்னை மரம்.
கையில்லாத ரவிக்கை அணியும் பெண்,
உறை இல்லாத வாள்.
குதிகால் செருப்பணியும் பெண்,
ஆதிவாசிகளின் நாகரிகப் பதிப்பு!"
இன்னும் சொல்கிறார்:
"பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பெண்ணை, "வஞ்சி'' என்றழைத்தார்கள்.
பெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம், "கன்னி" என்றழைத்தார்கள்.
காதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரிக் கடலில் விழுந்து செத்தவர் களெல்லாம், "குமரி" என்றழைத்தார்கள்.
மது அருந்திய பின், மனது 'கால்' வாங்கியதால், "மாது" என்றழைத்தார்கள்.
உள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதனால் அவள் "இல்லாள்" என்றழைக்கப்பட்டாள்!"
(இதைப் படித்தபோது எனக்கும் சில பெயர்க் காரணங்கள் கற்பனையில் உதித்தன.
அவைகளையும் சொல்லிவிடலாமா?)
நங்கை: கணவன் மீதுள்ள கோபத்தை பிள்ளைகளிடம் காட்டி, அவன் முன்னாலேயே அவர்களை "நங்கு..நங்கு" என்று குத்துவதால்....
மங்கை: கல்யாணத்துக்கு முன் மகிழ்ச்சியோடு இருந்த இளைஞர்களின் மனத்தை, கல்யாணத்துக்குப் பின் "மங்கச் செய்து விடுவதால்"........
சீமாட்டி: "சீ! இவளுக்கு கணவனாய் வந்து 'மாட்டி'க்கொண்டோமே!" என்று சில கணவர்கள் நினைப்பதால்.....
கண்ணதாசன் இன்னும் சொல்கிறார்.......
1. "குடித்த பிறகு ஒரு பெண்ணை நேருக்கு நேர் வர்ணிப்பதில் ஆனந்தம் அதிகம். அதையே, அவள் நிதானமான நேரத்தில் நினைவுபடுத்தும்போது....ஆத்திரம் அதிகம்!"
2. இலக்கியத்தில் "பிரிவாற்றாமை" என்னும் பகுதி பெண்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு அது இல்லாததற்குக் காரணம் இப்படியும் இருக்கலாம்: 'மனைவியைப் பிரிந்திருப்பதுதான் அவர்களுக்குச் சந்தோஷமா?'
3. சம்பாதிக்காத மனைவி, சம்பாதிக்கும் கணவனை மிரட்டுவதற்குப் பெயர் "குடும்பம்". புத்தியில்லாத மந்திரி, புத்தியுள்ள மந்திரியை
மிரட்டுவதற்குப் பெயர் :ஜனநாயகம்"!
4. "நீலகண்டன்" என்று இறைவனை அழைப்பது அவன் கழுத்திலிருக்கும் விஷத்துக்காக. "நீலவிழி" என்று பெண்களை அழைப்பது....அவர்கள் கண்களில் இருக்கும் 'விஷத்து'க்காக!
5. கல்யாணம் ஆன பிறகு ஓரு கவிஞன் இப்படிச் சிந்தித்தான்: "கற்பனையில் ஒரு பெண்ணைப் பற்றி வர்ணிக்கும்போதும், காதலைப் பற்றிப் பாடும்போதும்..அடடா! எவ்வளவு சுவையாக இருக்கிறது!
(அடடா! அனுபவிச்சு எழுதியிருக்கீங்க கவியரசரே!)