Jan 30, 2009

குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி Print E-mail
பெண்கள் ஸ்பெஷல் - மகளிர் மன்றம்
குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி தெரிந்துகொள்ளனுமா?

குழந்தை பிறந்த முதல் 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.

தாய் பால் மட்டுமே கொடுத்தால் போதும் அதிலே எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்.

முதல் 4 மாதம் முடிந்த பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுத்துக்கொண்ட்டே தண்ணீர் மற்ற ஆகாரங்களும் கொடுக்கலாம்.பிஸ்கட் சிறிது வார்ம் வாட்டரில் நனைத்துக்கொடுக்கலாம் குழந்தைகளுக்கு முழுங்குறதுக்கு தெரியவரும்.ஆரம்பத்தில் விழுங்குவதுக்கு கஷ்டமாக இருந்தாலும் கொடுக்க கொடுக்க பழகிடுவாங்க ஆரம்பத்திலேயே தண்ணீர் ஒருவாய் ஆகாரம் (ஆகாரம் எதுவாக இருந்தாலும்) ஒருவாய் என்று பழக்க படுத்திவிடாதீர்கள் அதுவே கடைசிவரை பழக்காமாகிவிடும்.

பிஸ்கட்டை கொடுக்கும் போது முதல் ஒரு பிஸ்கட்டில் இருந்து ஆரம்பிக்கவும். குழந்தை சாப்பிட ஆரம்பித்தால் அடுத்த நாள் 2 அப்படியே விரும்பிவிட்டால் பிஸ்கட்டின் அளவை கூட்டிக்கொண்டு போகலாம்.

முதலில் தண்ணீரில் நனைத்து நன்கு பேஸ்ட் மாதிரி பண்ணிவிட்டு கொடுங்கள் விழுங்குவதற்க்கு லேசாக இருக்கும். அதன் பிறகு பவுடர்மில்க் கொடுத்தால் அதைலேயே பிஸ்கட்டை குழைத்துக்கொடுக்கலாம்.

1 வயது வரை பசும்பால் குழந்தைகளுக்கு சேர்கக்கூடாது என்று டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவும் ஆண்பிள்ளைகள் என்றால் செமியா குணம் வாயு தொல்லைகள் கண்டிப்பாக வரும் அதனால் 1 வயது நிறைந்த பின்னாடி பசும் பால் ஆரம்பிக்கலாம்.

எப்பொழுதும் ஒரு உணவு கொடுத்துக்கொண்டு இருக்கும் போது மற்ற உணவை உடனே ட்ரை பண்ணக்கூடாது. ஒரு உணவு கொடுத்து ஒரு வாரம் கழிந்ததுக்கப்புறம் தான் மற்ற உணவை ட்ரை பண்ணனும் உடனுக்குடன் சேர்த்து கொடுத்தால் வாந்தி அல்லது வயிற்று வலி வந்தால் எல்லாவற்றயுமே நிறுத்தும் படி ஆகிவிடும் எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று தெரியாது.அதனால் குழந்தையின் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்து கொடுக்கலாம்.

5 ஆவது மாதத்தில் நெஸ்டம்,செரிலாக் கொடுக்கலாம்.டின் ஃபுட்டை விட வீட்டில் தயாரித்துக்கொடுக்கும் உணவே மிகவும் சிறந்தது.

இட்லி,ஆப்பம்(நடு பகுதி மட்டும்) போன்றவை 6 மாதத்தில் கொடுக்கலாம். எது முதலில் கொடுப்பதாக இருந்தாலும் காலையிலே ட்ரை பண்ணிவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக்கொண்டால் இரவு கொடுத்து பழக்கலாம் எதுவுமே இரவில் புதிதாக ட்ரை பண்ணி பார்க்க வேண்டாம்.பகலிலே ட்ரை பண்ணவும்.

6 மாதத்தில் குழந்தைகளுக்கு சூப், அப்புறம் சாதம் எல்லாம் ட்ரை பண்ணலாம். எந்த உணவு கொடுத்தாலும் தாய்ப்பாலை மட்டும் நிறுத்திவிடாதீர்கள் குறைந்தது 1 1/2 வயதுவரைக்குமாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்பால் குடிக்காத குழந்தைகளை விட தாய்பால் குடித்து வளரும் குழந்தைகள் தான் எல்லா விதத்திலுமே அறிவாளியாக இருப்பார்கள். நம் குழந்தைகள் நல்ல ஆக்டிவாக இருந்தால் நமக்கு தானே சந்தோஷம்.இப்பொழுது எல்லாம் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தே நிறைய தாய்மார்கள் தாய்பால் கொடுக்க மறுக்கின்றனர். உண்மையில் தாய்பால் கொடுக்காத தாய்மார்களை விட தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குதான் அழகு கூடுகிறது என்று சொல்கிறார்கள். தாய் பால் கொடுக்காதவர்களுக்குத்தான் மார்பக புற்று நோய் அதிகமாக வருகிறதாம்.

சூப் தயாரிக்கும் முறை:
கேரட் ஒரு துண்டு,உருளைகிழங்கு ஒரு துண்டு,பீன்ஸ் 1 ,வெள்ளைபூண்டு 1 பல்,இவற்றை தோல் நீக்கிவிட்டு சோம்பு ஒரு பின்ச்,சீரகம் ஒரு பின்ச்சேர்த்து இவற்றை நன்கு வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து தேவை என்றால் ஒரு துளி உப்பு போட்டு குழந்தைகளுக்கு காலை சமயம் 11 மணிக்

கு கொடுக்கலாம். 7 மாதத்தில் அந்த காய்கறியை நன்கு தண்ணீருடன் மிக்ஸியில் அடித்தும் கொடுக்கலாம் திக்காக இருக்கும் குழந்தைகளுக்கு டேஸ்டும் புதிதாக இருக்கும்.ஒரு நாள் காய்கறி சூப் என்றால் மறு நாள் ஜூஸ் கொடுக்கலாம் ஆரஞ்சு ஒரு பழத்தை பிழிந்து சுடு தண்ணீர் சிறிது ஊற்றி கொடுக்கலாம் சளி,இருமல் ஏற்படாது.

குழந்தைகளுக்கு சீனி சேர்ப்பதால் அடிக்கடி சளி இருமல் தொந்தரவு ஏற்படும் சீனிக்கு பதில் கற்கண்டை திரித்துவைத்து அதை சேர்த்துக்கொடுக்கலாம்.

சாப்பாடு தயாரிக்கும் முறை
அரிசி சிறிது,துவரம் பருப்பு சிறிது அல்லது சிறு பருப்பு,கேரட் பாதி உருளைகிழங்கு பாதி,பீன்ஸ் 1,வெள்ளை பூண்டு 2 பல், உப்பு சிறிது சேர்த்து இவற்றை நன்கு வேகவைத்து மசித்து மதியம் சாப்பாட்டுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் 4 நாள் கழித்து எல்லா சாமான்களையும் கூட்டிக்கொள்ளலாம்.8 மாதத்தில் இருந்து மசித்துக்கொடுக்காமல் அப்படியே கொர கொரப்பாகவே கொடுத்து பழக்கலாம்.

9 வது மாததில் முட்டை கொடுக்கலாம் ஆனால் சில குழந்தைகளுக்கு 9 மாதத்தில் முட்டை கொடுப்பதால் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வருவதாக சொல்கிறார்கள் அதனால் 1 வயதுக்கு பினாடியே கொடுப்பது நல்லது.

1 வயதில் சிக்கனில் சூப் செய்து கொடுக்கலாம். ஈரல் வேகவைத்த தண்ணீர் கூட கொடுக்கலாம் மிகவும் நல்லது.

2 வயது நிறைந்த பிறகு நாம் சாப்பிடும் சாப்பாட்டையே முழு உணவாக இல்லாமல் சிறிதாக ஊட்டி பழக்கலாம்.அவங்களுடைய சாப்பாட்டின் டேஸ்ட் பிடிக்காமல் இருந்தால் நம்முடையதே விரும்பி சாப்பிட்டால் 2 வயதிலேயே பழக்கிவிடலாம்.

பல் முளைக்கும் முன் கைலேயே பிஸ்கட்,ரஸ்க் கொடுத்து கடிக்க பழகி கொடுக்கலாம்.பக்கத்தில் நாமும் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் குழ்ந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு முன்னாடியே சாப்பாட்டை கொடுத்துவிட்டு இரவு 11 மணிக்கு பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள். அப்படி கொடுத்தால் நடு இரவில் பசித்து அழாது சில குழந்தைகள் இரவில் பல தடவை முழித்து அழும் ஏன் அழுகிறது எதனால் என்றும் தெரியாது. உடம்பு சரில்லாத நாட்களை தவிர மற்ற நாட்களில் அவர்களுக்கு இடையில் முழிப்பு வராது வயிரும் பசி எடுக்காது திரும்ப காலையில் 6 மணிக்கு பால் கொடுத்தாலே போதும்.

குழந்தைகளுக்கு பல் வந்த பிறகு இரவில் பால் கொடுத்து தூங்க வைப்பதாக இருந்தால் சிறிது தண்ணீர் கொடுத்துவிடுங்கள். பாட்டலில் கொடுக்கும் வரை தூக்கத்திலேயே கொடுத்துவிடலாம்.

ஆனால் 21/2 வயதுக்கு பின் கிளாஸில் பழக்கப்படுத்திவிடவும். இப்பொழுது குழந்தைக்கு 1 வயதுக்கு பின்னடியே நிறைய பேர் பால் பாட்டிலை நிறுத்திவிட்டு குழந்தை பால் குடிக்க மாட்டிக்கிறது என்று புலம்புகிறார்கள். பால் பாட்டிலை க்ளீன் செய்து அதை வெந்நீரில் போட்டு சுத்தம் செய்யும் வேலைக்கு எரிச்சல்பட்டு பால் பாட்டிலை நிறுத்தினால் குழந்தைகள் எதுவும் சாப்பிட்டவிட்டால் கூட பாலையாவது குடித்துவிடுவார்கள்.ஆனால் பாட்டலை நிறுத்திவிட்டு குழந்தை பாலும் குடிக்க மாட்டிகிறது என்று புலம்புவதில் அர்த்தமில்லை.ஆனால் பாட்டலில் கொடுக்கும் போது அடிக்கடி பாட்டல், நிப்பிலை மாற்றிவிட வேண்டும் க்ளீனிங் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது உள்ள குழந்தைகள் கிட்ட ஈஸியாக சொல்லி புரியவைக்கலாம் பாட்டலில் பால் குடித்தால் நீ இன்னும் பெரிய ஆளாக ஆகமுடியாது எல்லாரும் பேட்னு சொல்லுவாங்கன்னு ஒரு வாரத்துக்கு சொல்லி கொடுத்தால் அவங்களாகவே மறந்துடுவாங்க.


குழந்தைகளின் உணவுகொடுக்கும் நேரம்.1 வயது குழந்தைகளுக்கு

காலையில் 6 மணிக்கு பசும் பால் கொடுக்கலாம்.தாய்பாலும் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு பசி எடுக்கும் சமயம் எல்லாம் கொடுத்துக்கலாம்.

திரும்ப 8 மணிக்கு திரும்பவும் பால் அல்லது இட்லி, சாம்பார் காரமில்லாமல் ஊற்றிக்கொடுக்கலாம் அல்லது தேன் வைத்துகூட கொடுக்கலாம்.ராகி கூல்,சத்துமாவு ஏதாவது ஒன்னு இல்லைன்னா பிரெட் பாலில் ஊறவைத்தும் கொடுக்கலாம்.

ஒரே மாதிரி உணவை கொடுக்காமல் மற்றி மாற்றி கொடுக்கலாம்.

11 மணிக்கு ஏதாவது ஜூஸ் அல்லது காய்கறி,சிக்கன்,அல்லது ஈரல் சூப் ஏதாவது கொடுக்கலாம்.

1 மணிக்கு காய்கறி சாதம் கொடுக்கலாம்.திரும்ப 4 மணிக்கு பால் கொடுக்கலாம்.6 மணிக்கு பிஸ்கட்,ரஸ்க் கொடுக்கலாம்.பின் இரவு 8 மணிக்கு இட்லி,ஆப்பம்,பிரெட் பிடித்தது எதுன்னு தெரிந்துக்கொண்டு கொடுக்கலாம்.

திரும்ப இரவு 11 மணிக்கு பால் கொடுக்கலாம்.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது