Jun 12, 2009

ஆரம்பிச்சவங்க நல்லா இருக்கனும்

என் வலைப்பூவ யாரும் படிப்பாங்கன்னு நான் நினைக்கல, இதில மாட்டி விட்ட பிரியா

அவங்க அர்ஜுன் பற்றி எழுதின, அவங்க அப்பா(பிரியா அப்பா) பற்றி எழுதின பதிவுகள் எனக்கு பிடிச்சுத்தான் என் மகளுக்குன்னு ஒரு வலைப்பூ எழுத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அவ வளர வளர வலைப்பூ காஞ்சு போச்சு.

மறுபடி பூக்க வைக்கனும்

பிரியா அவங்க சாட் சிக்னல் எப்பவும் சிவப்பா இருக்க நான் காரணும்னு நினைக்கிறேன். அதான் என்ன இப்படி மாட்டி விட்டுடாங்க.

சரி சமாளிப்போம்ன்னு இறங்கினேன்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அம்மா, அப்பா வச்ச பேருங்க. மகேந்திரன் ரெம்ப பிடிக்கும், நெருக்கமான நட்புகள் மகின்னு கூப்பிடுவாங்க,

சாட்ல பெண்ணுனு நினைச்சி பேசறவங்க அதிகம்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பிரபாகரன் இறந்துட்டார்ன்னு சொன்னப்ப

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம் சில நேரங்கள்ல

பல நேரங்கள்ல பிடிக்கும் பைத்தியம்  மத்தவங்களுக்கு

4.பிடித்த மதிய உணவு என்ன?

என் தங்கமணி சமை க்கும் எதுவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அய்யோ ரெம்ப குறைவு.

சைலண்டா நூல் விட்டு பார்ப்பேன். இல்லன்னா கட் 

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவில குளிச்சிருக்கேன் ஆனா பயம், (எங்க வீட்டு பூக்குழாய்ல(அதாங்க ஷாவர்) வர்ரதே அப்படித்தான்

கடல்ல நனைஞ்சிருக்கேன் பிடிக்கும்(பாண்டில, ம்கும்ம்ம்ம்ம்ம் கூட தங்கமணி வேற, இல்லைன்னா அங்கனயே இருந்திருப்பேன்)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முழுசா பார்ப்பேன், பேசும் போது கண், அப்புறமா அவங்க அங்க சேஷ்டைகள்(அதாங்க மேனரிசம்)

 

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது          : -          பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(உளறுவாய்ன்னு சொல்வாங்களே)

பிடிக்காதது     :-          பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(மனசு திறந்து பேசறது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

நான் எது சொன்னாலும் நம்பிடுவாங்க

அது பொய்ன்னு

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மாவின் அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெளிர் நீல ஜீன்ஸ், வெளுத்துப்போன வெளிர் நீல முழுக்கை சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கொஞ்ச நேரம் முன்னாடி என் பாஸ் பாடுன பா(தி)ட்டு. இப்பவும் காதில கேட்டுட்டே இருக்கு.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஒரு காலத்தில நாலு கலர்ல வந்துச்சே அது மாதிரி

14.பிடித்த மணம்?

குழந்தையுன் மேல் வீசும் பால் வாசம்

கல்யாண வீட்ல மல்லிகை வாசம் வீசும் பெண்கள் வசம்(கண்டிப்பா திரு மணம் இல்லீங்க)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

நான் யாரையும் அழைக்க விரும்பலை

 
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பிரியா எழுதின எல்லாப்பதிவும்.

அதுலயும் அவங்க எழுதினதுல ஆயுசு கம்மியான பதிவு ரெம்ப பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு?

பொண்ணோட விளையாடற எந்த விளையாட்டும்(என் பொண்ண சொன்னேன்ங்க)

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம் பிறந்ததிலிருந்தே, எங்க குடும்பத்த நம்பி ஒரு கடையே இருக்குன்னா பாருங்களேன் 3 தலைமுறையா.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சிந்து பைரவி, கன்னத்தில் முத்தமிட்டால், அபியும் நானும் மாதிரி

அப்புறம் கமல் படம் எல்லாமே

20.கடைசியாகப் பார்த்த படம்?

அதுக்கு இன்னும் காலம் இருக்கு, ஆனா சொல்ல நான் இருக்க மாட்டேன்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

(இதுல கொஞ்சம் குழப்பம், வயசா, இல்ல சீதோஷணமான்னு)

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சிவாஜி கணேசன்(வாழ்க்கை வரலாறு)

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (கிட்டதட்ட 6 மாசமா)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வீட்ல தோனும் போது என் பொண்ணு படம்

ஆபிஸ்ல நீலம்(வண்ணம்னு சொல்லவந்தேனுங்க)

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது :    டே லூசப்பா
பிடிக்காதது :    என் கைப்பேசியில் என் பெண் கூப்பிடாத போதுள்ள அமைதியான சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அதிகபட்சம் 600கிமி (நான் குண்டு சட்டில குதிரை ஓட்ற ஆள்)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய உளறுவேன்

 

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வேலை செய்யாம இருக்க ஆயிரம் காரணம் சொல்றது

 

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அதீத காமம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அமைதியான எந்த இடமும்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
தேவைக்கு அதிகமா ஏதும் இல்லாம இருக்கனும்னு

(ஆனா உடம்பு அதிகம்)


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வேலைக்கு போவது, கணினில நேரத்த தொலைக்கிறது

 

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

--

http://therakathal.blogspot.com
http://t2fcomputer.blogspot.com

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது