Jan 8, 2009

நான் 2ரூவா கடன்காரன்

மதியம் 12 மணிக்கு மீட்டிங்ல இருக்கும் போது என் மொபைல்போனுக்கு  ஒரு கால் வந்த எண் சென்னை என்றது

சரி நாம் இருக்கிறது கஸ்டமர் கேர்+நிர்வாகம் அப்படிங்கறதால இந்தியா முச்சூடும் என் நம்பர்

இருக்கும் எங்க நெட்வொர்க்ல, அது போக இணையத்தில கூகுளாண்டவரும் காமிச்சி

குடுத்துடுவார்(என்ன பாவம் பண்ணினனே தெரியல).

எடுத்து

 

"ஹாலோ"000001991845


"சார் நீங்களா?"

(என் பேர சொல்லித்தான் கேட்டாங்க)

 

"ஆமாம் சொல்லுங்க நாந்தான்"

 

"நான் CICIC  இருந்து பேசறேன், நீங்க டுவீலர் ஒன்னு எடுத்திருக்கிங்களா?"

"ஆமா!!!!!!"

"அதுக்கு நீங்க பணம் கொங்சம் கட்ட வேண்டி இருக்கு"

 

"இல்லையே டியூ டேட் முடிய முன்னாடியே கட்டிரனே?"(நிசமாங்க)

 

"இல்லங்க இருக்கு எங்க ரிப்போர்ட்ல, எப்ப கட்டறீங்க"

 

"ஓகே சொல்லுங்க எவ்வளவுன்னு"

(சொன்ன தொகைய கேட்டு எனக்கு மயக்கமே வந்திருச்சு)

 

"சார் மறுபடியும் சொல்லுங்க"

 

"சார் நல்லா பாருங்க சார் இது உங்களுக்கே நல்லாருக்கா கேட்க"

 

"இல்ல சார் CICIC ல இருந்து சொன்னாங்க கேக்க சொல்லி"

"அப்ப நீங்க CICIC இல்லியா"

"இல்ல சார் கால் சென்டர்"

 

"என்ன சார் இது "

 

"ஏன் சார் அடுத்த முறை கட்டும் போது சேர்த்து வாங்கிக்கலாமே."

 

என்னால் மீள் முடியவில்லை அதிலிருந்து.

 

"சார்"

 

"ஓகே சார் "

லைன் கட்
அடுத்த 15 நிமிடத்தில் மீண்டும் அதே எண்ணிலிருந்து கால்

 

"சொல்லுங்க சார்"

 

"இல்ல சார் இன்னிக்கு வீட்டுக்கு வருவாங்க கட்டி ரெசிப்ட் வாங்கிக்கங்க காலைல 10 மணிக்கு

கூப்பிட்டு ரெசிப்ட் நம்பர் வாங்கிக்கறேன்."

 

"எதுக்குங்க வீட்டுக்கெல்லாம்"

 

”ஓகே சார்  காலைல வீட்டுக்கு வருவாங்க பணம் வச்சிக்குங்க கட்டி ரெசிப்ட்

வாங்கிக்குங்க நான் மறுபடியும் கூப்பிடறேன்.”

(இதுல சரியா சேஞ்ச் வச்சிக்கங்கன்னு வேற சொல்றான்)

 

மறுபடியுமா?

டேய் என்னங்கடா இது அப்புறம் ஏண்டா பேங்க எல்லாம் நட்டத்துல போகாது

(இது மேல பேற நட்டம் இல்லீங்க கீழ போற நட்டம்)

சரி மக்கா என்ன மதிப்பு சொல்லுங்க பாக்கலாம்

தப்பா நினைக்காலன்னா நானே சொல்லிடறேன்.
வெக்கமா இருக்கு

என்ன பண்ண மனசு கேக்கலயே

அந்த கடன்காரன் கேட்டது

2 ரூபாய்ங்க

வெறும் இரண்டு ரூபாய்ங்க

பாத்திங்களா என்ன எவ்வளவு கடன்காரன் ஆக்கிட்டான் அந்த கடன்காரன்

இப்ப தெரியுதுங்களா? பேங்க், கால் சென்டர் எல்லாம் எப்படி நடக்குதுன்னு.

இதுக்கு மொபைலுக்கு சென்னைல இருந்து STD கால், அதுவும் இரண்டு தடவை.
அடுத்த நாள் பைக்க போட்டுக்கிட்டு ஒருத்தன் என் வீட்டுக்கு கிட்டதட்ட 6 கிமி (போக வர 12கிமி)

அவனுக்கு சம்பளம், பெட்ரோல், அதுக்கு ஒரு ரெசிப்ட் அந்த நம்பர் கேக்க ஒரு கால் மறுபடியும்

எல்லாம் முடிச்சிட்டு ஒரு தேங்ஸ் சொல்வாங்களே.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது