Jan 10, 2009

பேப்பர் கிளிப்பை மூன்று பேர் கண்டு பிடித்தனர். 1899-ம் ஆண்டு வில்லியம் மிடில்புரூக்கும் 1900-ம் ஆண்டு பிராஸ்னனும் 1901-ம் ஆண்டு ஜோகன் வாலெரும் கண்டுபிடித்தனர். மூவருமே தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெற்றனர். இதனால் பேப்பர் கிளிப்பை யார் கண்டுபிடித்தது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.


ஆனால் மூன்றாவதாக கண்டுபிடித்த ஜோகன் வாலெர்தான் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தவர் என்று அங்கீகாரம் தரப்பட்டது. காரணம்,1899-ம் ஆண்டே ஜோகன் வாலெர் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அவர் பிறந்த நாடான நார்வேயில் அப்போது காப்புரிமைச் சட்டம் கிடையாது. இதனால் அவர் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை கோரினார்.

 

இது தவிர மற்ற இருவரையும் விட வயதில் ஜோகன் இளையவராக இருந்தார். அவர் பிறந்த ஆண்டு 1866. இதனால் ஜோகன் வாலெரே பேப்பர் கிளிப்பின் கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது