Jan 10, 2009

தெரிந்து கொள்ளுங்களேன்

ஆர்டிக், அலாஸ்கா (அமெரிக்கா), கனடா, ரஷியா, இங்கிலாந்து, நார்வே, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் துருவக் கரடிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆண் துருவக் கரடி 10 அடி உயரம் வரை வளரும். எடை 650 கிலோ இருக்கும். பெண் துருவக் கரடி 7 அடி உயரம் வரை வளரும். எடை 300 கிலோ வரையே இருக்கும்.
25 வருடங்கள் வரை இவை வாழும். நீண்ட தூர நீச்சலில் துருவக் கரடிகள்தான் சாம்பியன் என்று சொல்லலாம். ஏனெனில் ஓய்வெடுக்காமல் ஒரே வீச்சில் 161 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தும். கடல் நீருக்குள் வாழாத ஒரு விலங்கு இவ்வளவு தூரம் நீந்துவது ஆச்சர்யமானது. தற்போது 40 ஆயிரம் துருவக் கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
__________________________________________________________________________________________

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது