அம்பிகையை காய்கறிகளால் அலங்கரிப்பது ஏன்?
மண்ணில் விளைபவை யாவும் அந்த மகேஸ்வரியின் படைப்பே அதனால் அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக காய் கறிகளால் அலங்கரிக்கிறார்கள். இதற்கு புராணக்கதை ஒன்றும் உண்டு. துர்க்கமன் என்கிற அரக்கன், மண் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரம். அவனது அட்டூழியம் தாங்காமல், பூமிதேவியே வாடிப்போனாள். அதனால், விளைச்சலே இல்லாமல் பசி, பஞ்சம், பட்டினியால் வாடினார்கள் மக்கள். அந்தப் பசி மயக்கத்திலும் அம்பிகையைத் துதித்தார்கள். அரக்கனை அழிக்க உரிய காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அம்பிகை. அதே சமயம், அதுவரை உலக உயிர்கள் பசித்திருப்பதை விரும்பாத தேவி, தன் அம்சமான ஒரு தேவியைப் படைத்து, உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும்படி சொன்னாள்.
அப்படி வந்த அன்னையே சாகம்பரி தேவி. அவளது அருளால்தான், இன்றும் பயிர்கள் யாவும் விளைவதாக ஐதிகம். நவராத்திரி காலத்தில்தான் துர்க்கமன் என்ற அசுரனையும் அழித்தாள் தேவி. அதனாலேயே அவள் துர்க்கையானாள். பயிர்வளரச் செய்து உயிர்காப்பவள் என்பதால் அவளுக்குக் காய்கறிகளாலேயே அலங்காரம் செய்து சாகம்பரி எனத் துதிக்கும் வழக்கம் வந்தது.
பிள்ளையாரை கரைப்பது ஏன்?
பஞ்சபூதத்திற்கு என தனித்தனி தெய்வங்கள் உண்டு. ஆகாயத்திற்கு சிவன்; வாயுவிற்கு - சக்தி; அக்னிக்கு - சூரியன்; நீருக்கு - விஷ்ணு; மண்ணிற்கு கணபதி.
பூமியாகிய மண்ணிற்கு தெய்வம் கணபதி என்பதால், அவரை பூஜித்து முடித்ததும் நீரில் கரைத்தும் மீண்டும் பூமியில் சேர்த்து விடுகிறார்கள்.
ஆண்டவனை பூஜிக்க பூ, பழங்களைப் படைப்பதன் தத்துவம் என்ன?
மலர்கள் அழகானவை. பல வண்ணங்களில், பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் அவற்றின் வாழ்க்கையோ மிகவும் குறுகியது. தம்மிடமுள்ள தேனை அது வண்டுகளுக்குக் கொடுத்துவிடுகின்றன. மலர்கள், குறுகிய கால வாழ்விலும் பிறருக்கு இனிமை தந்து தியாக உணர்வுடன் சேவை செய்கின்றன. அதேபோல, பழங்களும் தம்மிடமுள்ள சத்துகளை மனிதனும், பறவைகளும், விலங்குகளும் வாழ உணவாகக் கொடுக்கின்றன. பழத்தைப் பறிக்காமல் விட்டு விட்டாலும் அது கனிந்து, உதிர்ந்து மண்ணுடன் கலந்து தனது சதையை புழு, பூச்சிகளுக்கும்; வித்தை மண்ணில் மீண்டும் உயிர்ப்பிக்கவும் கொடுத்து உதவுகிறது. இயற்கையின் வடிவங்களில் தியாக உணர்வைக் காட்டும் அற்புதமான சின்னங்களாக மலர்களும், கனிகளும் விளங்குவதால், ஆண்டவனுக்கு மிகவும் உகந்தவையாக அவை கருதப்படுகின்றன.
ஹோ அக்னியில் பட்டுப்புடவை, ரத்தினம், நெல் போன்றவற்றைப் போடுவது, விரயமாகாதா?
வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதன் தத்துவம் புரியாத ஒருவன், சூஅருமையான நெல் மணிகளை சேற்றில் வீசி வீணடிக் கிறார்கள்' என்றுதான் சொல்வான். விவசாயி செய்யும் செயலால் ஒவ்வொரு நெல்லும் பலநூறு நெல் மணிகளைக் கொடுக்கும்; அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது, அந்த விவசாயிக்கும், விஷயம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். "அக்னி முகேந தேவா' என்று சொல்வார்கள். நமக்கு மழையைக் கொடுத்து, வெப்பத்தையும் தந்து, வளமையும் செழுமையும் அருளும் தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்யும் பிரார்த்தனைதான் ஹோமம். அதில் நாம் வேண்டிக்கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும்போது, அது பல மடங்காக நமக்கு பிரதிபலனை அளிக்கிறது. எனவே அது விரயமும் ஆகாது; வீணாக்குவதும் ஆகாது.
நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை அம்பாளாக பாவிப்பது ஏன்?
நவராத்திரியின் ஆரம்பநாளில்தான், சகல தேவர்களின் அம்சங்களும் கொண்டவளாக அம்பிகை அவதரித்தாள். மஹாசக்தியான அவள், ஒன்பது நாட்கள் தவம் இருந்து அசுரர்களை அழித்து, முடிவில் மகிஷாசுரனை மாய்த்தாள். நவராத்திரி நாளில்தான் அம்பிகை பிறந்தாள் என்பதால், அவளை அந்த நாட்களில் சிறுமியாகவே பாவித்து பூஜிப்பது சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நவராத்திரி நாட்களில், முதல்நாள் தொடங்கி பத்தாம்நாள் வரை குறிப்பிட்ட வயதுள்ள பெண் குழந்தைகளை, குறிப்பிட்ட பெயர்களில் அழைத்து, அலங்கரித்து பூஜிக்க வேண்டும் என்ற பூஜாவிதியும் உண்டு. இரண்டு வயதுக் குழந்தையை முதல் நாள் அழைத்து குமாரீ என்றும்; மறுநாள் மூன்று வயதுக் குழந்தையை த்ரிமூர்த்திதேவியாக பாவித்தும்; மூன்றாம் நாளில் கல்யாணீ என்ற திருநாமத்தால் நான்கு வயதுக் குழந்தையையும் பூஜிக்க வேண்டும். இந்த வரிசையில் நான்காம் நாளில் ஐந்து வயதுக்குழந்தையை ரோகிணிதேவி எனவும்; ஐந்தாம் நாள், ஆறுவயதுக் குழந்தையை காளிகா தேவியாக பாவித்தும்; ஆறாம்நாள் ஏழுவயதுக் குழந்தையை சண்டிகையாகப் போற்றியும்; ஏழாவது நாளில் எட்டு வயதுக் குழந்தையை சாம்பவி என அழைத்தும்; எட்டாம் நாளில் ஒன்பது வயதுக் குழந்தையை துர்க்கையாக பாவித்தும் வணங்கிடல் வேண்டும். பத்தாம் நாளான விஜயதசமியன்று, பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராதேவியாக பாவித்து வழிபடுவது மிகமிகச்சிறப்பானது. குழந்தையும் தெய்வமும் கூடி நிற்கும் காலம், நவராத்திரி. அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் குழந்தையும், அம்பிகையின் வடிவமே!
வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை சில ஆலயங்களில் காணலாம். இம் மரத்தை வணங்கி வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே! பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தார்களாம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்தனூர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.
விநாயகர் யானை முகம் கொண்டதேன்? அவர் அமர்ந்துள்ள மூஞ்சுறு, தலையை நிமிர்த்தி விநாயகரைப் பார்ப்பதேன்.
ஆத்ம விசாரணையில் முக்கியமானது வேதாந்தக் கருத்துகளைக் கேட்பது. (சிரவணம்) அவற்றைத் தனியே அமர்ந்து சிந்தித்து ஆராய்வது (மனம்) ஆகியவையாகும். கணபதியின் பெரிய காதுகள் இவற்றை உணர்த்துகிறது. அப்படி அளவில்லா ஞானம் பெற்றிருந்தாலும் அதை புத்திசாலித்தனமாக உபயோகிக்க வேண்டும் ஞானத்தில் சூட்சுமம், வெளிப்படை என இரண்டும் உண்டு. சூட்டிலிருந்து குளிர்ச்சியையும், இருட்டிலிருந்து வெளிச்சத்தையும் பிரித்து உணர்வது, வெளிப்படை ஞானம். தீமையிலிருந்து நன்மையையும் பொய்யிலிருந்து உண்மையையும் புரிந்து கொள்வது சூட்சும ஞானம். யானை தனது துதிக்கையால் மரத்தையும் அசைத்துப் பிடுங்கும்; நுட்பமான ஊசியையும் பொறுக்கி எடுக்கும். சூட்சுமம், வெளிப்படையான ஆற்றல் இரண்டுமே அதற்கு உண்டு. எனவே, கணபதி யானை முகம் கொண்டார்.
அவரது திருமுன் பழங்கள், பலகாரங்கள் இருந்தாலும் மூஞ்சுறு அதைச் சாப்பிட முயலுவதில்லை; தன் ஆசைகளை அடக்கி கணபதியின் உத்தரவிற்காக நிமிர்ந்து பார்க்கிறது. பக்தர்கள் புலன்களை அடக்கி கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
கடவுளை அனைவரும் வழிபடுகிறோம். ஆனால் மிகவும் சிலருக்கே பூரண ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?
ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் பழுக்கின்றன. அதன் பயன் அதன் கொட்ட யிலிருந்து மற்றொரு மரம் தோன்றத்தான். ஆனால் ஒவ்வொரு மரத்திலிருந்தும் தோன்றும் அத்தனை பழங்களிலும் உள்ள எல்லா வித்துக்களும் மரமானால், உலகில் வேறு எதற்கும் இடம் இருக்காது ஒரு மரத்தில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானாலும் நாம் திருப்தியடைகிறோம். மற்ற வித்துகள் வீணானதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. அதுபோல, நம்மில் கோடிக்கணக்கானவர்கள் ஆத்ம நலம் பெறாமல் போனாலும் யாராவது ஒரே ஒருவரின் ஆன்மா பூரணத்துவம் பெற்றால் அதுவே, மக்கள் அனைவரையும் காக்கும்.
உறியடி உற்சவத்தின் போது பலர் சறுக்கு மரத்தில் ஏறிச்சறுக்கினாலும் ஒருவன் எப்படியோ ஏறிவிடுவான். அப்படி ஒருவன் ஏறவே பலர் பிரயாசைப்பட்டு அந்த உற்சவத்தை நடத்துகிறார்கள். நம் உலக விளையாட்டும் அவ்வாறே. எத்தனை முறை சறுக்கினாலும் சறுக்கு மரத்தில் திரும்பத் திரும்ப ஏற முயல்வதைப் போல பூரணத்துவம் பெற முயன்று கொண்டே இருப்போம். கடவுள் யாருக்குக் கை கொடுத்து பூரணத்துவம் தர நினைக்கிறாரோ, அவரை பூரணமாக ஆக்கிவிடுவார். அதுவே நம் எல்லோரது முயற்சிக்குமான பலனாகும்.
Oct 19, 2008
அர்த்தமுள்ள இந்து மதம்
Labels: அர்த்தமுள்ள இந்து மதம்

உறியடி உற்சவத்தின் போது பலர் சறுக்கு மரத்தில் ஏறிச்சறுக்கினாலும் ஒருவன் எப்படியோ ஏறிவிடுவான். அப்படி ஒருவன் ஏறவே பலர் பிரயாசைப்பட்டு அந்த உற்சவத்தை நடத்துகிறார்கள். நம் உலக விளையாட்டும் அவ்வாறே. எத்தனை முறை சறுக்கினாலும் சறுக்கு மரத்தில் திரும்பத் திரும்ப ஏற முயல்வதைப் போல பூரணத்துவம் பெற முயன்று கொண்டே இருப்போம். கடவுள் யாருக்குக் கை கொடுத்து பூரணத்துவம் தர நினைக்கிறாரோ, அவரை பூரணமாக ஆக்கிவிடுவார். அதுவே நம் எல்லோரது முயற்சிக்குமான பலனாகும்.நன்றி-குமுதம் பக்தி
blog comments powered by Disqus

Subscribe to:
Post Comments (Atom)