ஒவ்வொருவனும் தன் தனி திறமையால் அரசின் ஆணையை முறியடிக்க முயற்சித்தால் அரசியல் அமைப்பே இருக்கமுடியாது. சமுதாயம் சீர் குலைந்து போகும். அரசுக்கு எதிர்ப்பான கருத்துக்களை சொல்லலாம் . ஆனால் அரசின் சட்டங்களுக்கு உட்படாமல் செயல்படுவது நல்ல குடிமகனுக்கு அழகல்ல--சக்ரடீசு
Jun 28, 2008
[+/-] |
உன் நினைவுகள் |
இன்று உனை காண
நீ வரும் வழி நோக்கி
நான் விழி பூத்து நிற்க
அதோ மூன்றாம் பிறையாய் நீ.?
[+/-] |
உன் நினைவுகள் |
எங்கு போனது
எனக்குள்ளிருந்த உன் நினைவுகள்
.
.
.
.
.
மோய்ப்பன் தொலைத்த
ஆட்டுக்குட்டி போல்
தோளில் போட்டு கொண்டு
தொலைத்து விட்டதாய் நினைத்து விட்டேன்.
[+/-] |
உன்னை பற்றி |
எங்கு போயிற்று
என்னுள் இருந்த
உன்னை பற்றிய எண்ணங்கள்,
இதோ !
பார்வை இல்லாதவன் முன்னிருக்கும்
சில்லறை காசைப் போல்
அகப்படாமல்
துலாவிக் கொண்டு இருக்கிறேன்.
[+/-] |
மூன்றாம் பிறை |
மணித்துளிகள் கரைய
மாதங்கள் மறைய
வாரங்கள் விலக
நாட்கள் நகர
காத்திருந்தேன்
உன் முகம் பார்க்க,
வந்ததும் மறைந்து கொண்டாய்,
மூன்றாம் பிறை
உன் முகம் காட்டி
மறைகின்றாய்.......
Jun 27, 2008
[+/-] |
விரல் |
ஐந்து விரல்களில்
ஆள் காட்டி விரலாயிருக்க வேண்டும்,
அடுத்தவர்களுக்கு
வழிகாட்ட,
ஐந்து விரல்களில்
சிறு விரலாயிருக்க வேண்டும்,
சிறிதானாலும்
உறுதியாய இருக்க...
ஐந்து விரல்களில்
கட்டை விரலைய் இருக்க வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை
என்றிருக்க....
ஐந்து விரல்களில்
மோதிர விரலாய் இருக்க வேண்டும்,
மதிப்புள்ளவனக இருக்க....
[+/-] |
ஓஷோ |
நீங்கள் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் . கொள்கையளவில் நின்று விடுபவை நன்மையும் தீமையும். வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதை தேர்ந்தெடுத்து கொள்ள வழியில்லை. எதார்த்த நிலையில் பெரிய தீமை, சிறிய தீமை ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.--ஓஷோ
[+/-] |
உன்னை சுற்றி.......... |
படுக்கையில்
என் உடல்
இடம், வலமாய் புரள
என் எண்ணங்கள் மட்டும்
உன்னருகில்,
உன்னையும் உன்னை
சுற்றியும்.....
[+/-] |
|
நீ அவர்களை புரிந்துகொள்ளபோவதே இல்லை , நீ அவர்களை வெறுக்கும் வரை